
புதுச்சேரி அரசு மின்துறையில் காலியாக உள்ள 177 கட்டுமான உதவியாளர் பணியிடங்களை நிரப்பவதற்காக தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தகுதியானவர்களிம் இருந்து விண்ணப்பங்கள் கடந்த 13-ந் தேதி முதல் பெறப்பட்டு வருகின்றன.
இதற்கான கடைசி நாள் 22-ம்தேதி என முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது விண்ணப்பிக்கும் தேதி 26-ந் தேதி மாலை 3 மணி வரை நீ்ட்டிக்கப்பட்டுள்ளது.
பணியிடங்களின் விவரம்:
நிறுவனம் - மின்துறை
வேலை - கட்டுமான உதவியாளர்
பணியிடம் - புதுச்சேரி
காலியிடங்கள் - 177
ஆரம்ப நாள் - 13.9.25
கடைசி நாள் - 26.9.25
கல்வித் தகுதி - SSLC தேர்ச்சி/ எலக்ட்ரீஷியன், வயர்மேன் டிரேடு -2, கிராப்ட்ஸ் மேன்ஷிப் சான்றிதழ் பெற்றவர்கள்
வயது வரம்பு - 18 முதல் 32 வயது வரை(இடஒதுக்கீடு அடிப்படையில் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது)
தகுதி வாய்ந்தவர்கள் தங்களது விண்ணப்பங்களை https://recuritment.py.gov.in என்ற இணையதள முகவரி மூலம் வரும் செப்டம்பர் 26-ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
பின்னர் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, விண்ணப்ப நகலை 29-ந் தேதி மாலை 3 மணிக்குள் கண்காணிப்பு பொறியாளர், மின் துறை அலுவலகம், என்.எஸ்.சி., போஸ் ரோடு, புதுச்சேரி 605001 என்ற முகவரியில் சமர்பிக்க வேண்டும் என புதுச்சேரி மின்துறை கண்காணிப்பு அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.