தமிழ்நாடு, புதுச்சேரியில் 20ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அடுத்த 3 நாட்களில் மேற்கு வடமேற்கு திசைகளில் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரக்கூடும். ஆனால் 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது நாளைய தினம் வலுபெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகருவதால், தமிழ்நாடு, புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்
பெரம்பலூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும், கோயம்புத்தூர், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
20-ம் தேதி செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், காரைக்கால், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
.