சென்னை மாநகராட்சியில் 306 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. செவிலியர், சமூகப் பணியாளர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 306 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் செப்டம்பர் 15, 2025-க்குள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் :
தமிழ்நாடு அரசு சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Staff Nurse
காலியிடங்களின் எண்ணிக்கை: 288
கல்வித் தகுதி: DGNM அல்லது B.Sc Nursing பட்டம்.
சம்பளம்: ரூ. 18,000
Social Worker
காலியிடங்களின் எண்ணிக்கை: 5
கல்வித் தகுதி: Master of Social Work (MSW) படித்திருக்க வேண்டும். அல்லது மனநல சமூகப் பணியில் இரண்டு வருட முழு நேரப் படிப்பில் (M.Phil) பட்டம்.
சம்பளம்: ரூ. 23,800
Psychologist
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: i) Rehabilitation Council of India அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் Clinical Psychology-இல் அங்கீகரிக்கப்பட்ட தகுதி. (அல்லது) ii) Psychology, Clinical Psychology, Applied Psychology அல்லது Clinical Psychology/Medical மற்றும் Social Psychology ஆகிய துறைகளில் இரண்டு வருட முழு நேரப் படிப்பில் முதுகலை பட்டம் அல்லது (M.Phil) பட்டம்.
சம்பளம்: ரூ. 23,000
Vaccine Cold Chain Manager
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: B.E or B.Tech in Computer Science or IT படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 23,000
Senior Treatment Supervisor
காலியிடங்களின் எண்ணிக்கை: 7
கல்வித் தகுதி: 1. அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் தேர்ச்சி அல்லது அங்கீகரிக்கப்பட்ட சுகாதார ஆய்வாளர் படிப்பு. 2. MS Office-இல் சான்றிதழ் படிப்பு. 3. நிரந்தர இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம்.
சம்பளம்: ரூ. 19,800
Programme Cum Administrative Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 12,000
Hospital Worker
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.8 ஆம் வகுப்பு தேர்ச்சி/தேர்ச்சி பெறாதவர்கள்.
சம்பளம்: ரூ. 8,500
Security Staff
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி/தேர்ச்சி பெறாதவர்கள்.
சம்பளம்: ரூ. 8,500
தேர்வு செய்யப்படும் முறை: தமிழ்நாடு அரசு சென்னை மாநகராட்சி பதவிகளுக்குத் தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் : தமிழ்நாடு அரசு சென்னை மாநகராட்சி பதவிகளுக்கு விண்ணப்பிக்க அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க – https://chennaicorporation.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர், பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: “Office of the Member Secretary, CCUHM / City Health Officer, Public Health Department, 3rd Floor, Amma Maligai Greater Chennai Corporation, Ripon Buildings, Chennai – 3”
கூடுதல் விவரங்களுக்கு, விண்ணப்பதாரர்கள் The City Health Officer, Public Health Department, Ripon Buildings, Chennai – 600 003, தொலைபேசி எண்கள்: 044 – 2561 9330, 044 – 2561 9209, ஆகியவற்றை பணி நாட்களில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.09.2025
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://chennaicorporation.gov.in/ என்ற இணைய தள பக்கத்தைப் பார்வையிடவும்.