

சென்னை மாநகராட்சியின் வாட்ஸ்அப் செயலி வாயிலாக சொத்து வரி மற்றும் குடிநீர், கழிவுநீர் கட்டணங்களை எளிதாக செலுத்தலாம் என்று மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களின் அலைச்சலை குறைப்பதற்காக சொத்து வரி மற்றும் குடிநீர், கழிவுநீர் கட்டணங்களை வாட்ஸ்அப் மூலம் எளிதாகச் செலுத்தும் புதிய அதிநவீன டிஜிட்டல் சேவையைத் இப்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இனிமேல் மாநகராட்சி அலுவலகங்களுக்கு சென்று நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருப்பதைத் தவிர்க்கும் வகையில் பிரத்யேக வாட்ஸ்அப் சாட்பாட் எண் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது..
அதாவது, பொதுமக்களின் அன்றாடத் தேவைகளை எளிமையாக்கும் நோக்கில் ஏற்கனவே சென்னை மாநகராட்சி, பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு குடிமை சேவைகளை இணையதளம் மற்றும் வாட்ஸ்அப் தளங்கள் மூலம் வழங்கி வருகிறது.
சொத்து வரி செலுத்துதல், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் சேவைகள், புகார் பதிவு மற்றும் கண்காணிப்பு உள்ளிட்ட 42 சேவைகளுடன், தற்போது சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் (CMWSSB) குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணங்களையும் வாட்ஸ்அப் வழியாக செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் பொதுமக்கள் நீண்ட நேரமாக மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய அலுவலகங்களில் காத்திருந்து கட்டணங்களைச் செலுத்தும் முறைக்கு சென்னை மாநகராட்சி சூப்பராக ஒரு முற்றுப்புள்ளியை வைத்துள்ளது.. அதன்படி, மிக முக்கியமான மற்றும் அதிரடியான டிஜிட்டல் வசதியை மக்கள் பயன்பாட்டிற்கு இப்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் சாட்பாட் எண் 94450 61913 மூலம் தங்களது சொத்து வரி, குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணங்களை எளிதாகவும், பாதுகாப்பாகவும் செலுத்தலாம். மேலும் இந்த ஒரே ஒரு வாட்ஸ்அப் நம்பரை பயன்படுத்துவதன் மூலம், பொதுமக்கள் தங்களின் சொத்து வரி, குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டண விவரங்கள், நிலுவைத் தொகைகள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளவும் மற்றும் ரசீதுகளையும் உடனுக்குடன் பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன், அரசுக்கான வரிகளையும் எந்தவிதமான சிரமமுமின்றி உடனுக்குடன் வீட்டில் இருந்துக்கொண்டே செலுத்திவிட முடியும்.
மேலும் இந்த வாட்ஸ்அப் சேவை மூலம் பாதுகாப்பான முறையில் பணப் பரிவர்த்தனைகளை செய்ய முடியும்.. கட்டணம் செலுத்தியதற்கான அதிகாரப்பூர்வ ரசீதுகளையும் உடனே டவுன்லோடு செய்து கொள்ளும் அதிநவீன வசதியும் இதில் செய்யப்பட்டுள்ளது.
இந்த நவீன டிஜிட்டல் சேவைகள் மூலம், பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் குறைவதுடன், நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருப்பதை தவிர்க்கிறது. பொதுமக்கள் 24 மணி நேரமும் தங்களுக்கு ஏற்ற நேரத்தில் இந்த சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது வாரத்தில் 24 மணி நேரமும், 7 நாட்களும் எப்போது வேண்டுமானாலும் இந்தச் சேவையை மக்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதால், பொதுமக்களுக்கு அலைச்சலும் இருக்காது. நேரமும், போக்குவரத்துக்கான செலவும் மிச்சமாகும்.
எனவே, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பொதுமக்களும் வாட்ஸ்அப் சேவைகளைப் பயன்படுத்தி தங்களது சொத்து வரி, குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணங்களை காலதாமதமின்றி செலுத்தி இச்சேவைகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
டிஜிட்டல் ஆளுமையை நோக்கி சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ள இந்த சிறப்பான நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.