போலீஸ் வளையத்தில் சென்னை - தவெக தொண்டர்களின் அடுத்த மூவ் என்ன?

Police protection
Tamilnadu Police
Updated on

தவெக ஆட்சியமைக்க பிற கட்சிகளை நாடி விஜய் எடுக்கும் அதிரடி முடிவுகளால் தமிழ்நாடு அரசியலில் அடுத்தடுத்த திருப்பம் நிகழ்ந்து வருகிறது . ஏற்கனவே காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் தவெகவின் இடங்கள் 116 ஆக உள்ளது .

ஆட்சி அமைக்க தேவையான இன்னும் 2 இடத்துக்காக தற்போது விசிக வின் ஆதரவை கோருகிறது தவெக. இதற்கிடையே இதுவரை ஆட்சி அமைக்க அனுமதி வேண்டி மூன்று முறை ஆளுநரை சந்தித்த விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரிய போதிலும் இரண்டு இடங்களால் பெரும்பான்மை நிரூபிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

தவெக கட்சிக்கு ஆதரவாக அறிவிப்பு வந்தவுடன் விஜய் அங்கு நேரடியாக வர இருப்பதை முன்னிட்டு விறுவிறுப்பாக தயாராகி வருகிறது சென்னை அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகம். இதன் மூலம் திருமாவளவன் தவெகவிற்கு ஆதரவாக தனது நிலைப்பாட்டை தெரிவிப்பார் என்ற உறுதியை தந்துள்ளது.

விசிக அலுவலகத்திற்கு விஜய் வர உள்ளதாக கூறப்படும் நிலையில் அங்கு தவெக ஆதரவாளர்கள் கட்சிக் கொடிகள் ஏந்தி குவிந்த வண்ணம் உள்ளனர். விசிக தொண்டர்களும் விஜய்க்கு ஆதரவான பதாகைகளை ஏந்தி அந்த அலுவலகத்தில் கூடி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக வெற்றி கழகத்திற்கு திருமாவளவன் ஆதரவை அளிக்க வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் வைத்து திருமாவளவனை சந்திக்க உள்ளார் விஜய் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தவெக தலைவர் விஜயின் வருகை காரணமாக சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.விஜயின் வருகையால் சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது .

மேலும் பெரும்பான்மை நிரூபிக்க இன்னும் 2 இடங்களே வேண்டும் என்ற நிலையிலும் ஆளுநர் இன்னும் தவெக கட்சியை ஆட்சியமைக்க அழைக்கவில்லை என்பதால் அக்கட்சியினர் மெரினாவில் போராட்டம் நடத்தக்கூடும் என்பதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடற்கரைக்கு செல்லும் அனைத்து வழிகளிலும் போலீசார் தீவிர தொடர் சோதனையும் மேற்கொண்டு வருகின்றனர்.

விரைவில் தகவல்கள் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் மக்களுடன் தவெக தொண்டர்களும் காத்த உள்ளனர்.

இதையும் படியுங்கள்:
கையில் சிகப்பு கயிறு! நெற்றியில் திலகம்! Dress Code-ஐ மாற்றிய விஜய்..!
Police protection
logo
Kalki Online
kalkionline.com