பூமிக்கு அடியில் ஆபத்து... மெல்ல மெல்ல உள்வாங்கும் சென்னை: அதிரவைக்கும் புதிய ஆய்வு!

சென்னை மாநகரில் நிலப்பரப்பு உள்வாங்குவது குறித்தும், கடல் மட்ட உயர்வு குறித்தும் அதிர்ச்சியூட்டும் புதிய ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.
chennai flood risk
chennai flood riskAI Image
Updated on

சென்னை மாநகரில் நிலப்பரப்பு உள்வாங்குவது குறித்தும், கடல் மட்ட உயர்வு குறித்தும் அதிர்ச்சியூட்டும் புதிய ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. குறிப்பாக குறிப்பாக சென்னை நகரில் 5 முக்கிய பகுதிகள் நாள்தோறும் உள்வாங்கி வருவதாக ஐ.ஐ.எஸ்.இ.ஆர் மொஹாலி ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆய்வு எச்சரிக்கிறது.

சென்னைக்குக் கீழே உள்ள நிலப்பரப்பு ஆண்டுக்கு 1.5 செ.மீ வரை தாழ்ந்து வருவதாகவும், அதே வேளையில் கடலோரக் கடல் மட்டம் ஆண்டுக்கு 2.8 மி.மீ உயர்ந்து வருவதாகவும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இதன்படி போரூர், மதுரவாயல், கொடுங்கையூர், சேப்பாக்கம், சென்னை விமான நிலையம் மற்றும் பனையூர் ஆகிய பகுதிகள் ஆண்டிற்கு ஆண்டுக்கு 3 மில்லி மீட்டர் முதல் 15 மில்லி மீட்டர் வரை நிலத்தில் உள்வாங்கி (Land Subsidence) செல்வதாக ஐ.ஐ.எஸ்.இ.ஆர் மொஹாலி ஆராய்ச்சியாளர்களின் அதிர்ச்சியூட்டும் புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பூமிக்கு அடியில் உள்ள மென்மையான களிமண், வண்டல் மண் மற்றும் மணல் ஆகியவற்றின் அழுத்தம், உள்ளூர் புவியியல் அமைப்புகள் மற்றும் நகரக்கட்டமைப்புகளின் அதிகப்படியான பாரம் ஆகியவையே இதற்கு முக்கியக் காரணங்களாக ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

மிகவும் பாதிப்படைந்த பகுதிகளான போரூர் மற்றும் மதுரவாயல் இடையே உள்ள 18 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான பகுதியில்தான் நிலம் உள்வாங்குதல் மிக அதிகமாகப் பதிவாகியுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. போரூர் ஆண்டிற்கு 15 மி.மீ, மதுரவாயல் ஆண்டிற்கு 13 மி.மீ, கொடுங்கையூர் ஆண்டிற்கு 10 மி.மீ, சென்னை விமான நிலையம் ஆண்டிற்கு 3 மி.மீ முதல் 10 மி.மீ வரையும், சேப்பாக்கம் மற்றும் பனையூர் ஆண்டிற்கு 3 மி.மீ முதல் 8 மி.மீ வரையும், பெரம்பூர் மற்றும் பாலவாக்கம் பகுதிகளில் ஆண்டுக்கு 2 மி.மீ முதல் 4 மி.மீ வரையும் நிலம் சற்று உயர்வது ஆய்வில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக போரூர் மற்றும் மதுரவாயிலுக்கு இடைப்பட்ட பகுதியில் 18 சதுர கிலோ மீட்டர் பகுதி மிக மோசமாக பாதிக்கப்பட்டு ஆண்டுக்கு 15 மில்லி மீட்டர் வரை நிலம் மூழ்கி வருகிறது.

சென்னை விமான நிலையம் மற்றும் கிழக்கு கடற்கரை பகுதிகளும் ஆண்டுக்கு 3 மில்லி மீட்டர் முதல் 10 மில்லி மீட்டர் வரை நிலம் உள்வாங்கின்றன.

அதாவது கடல் நீர்மட்டம் ஆண்டிற்கு சுமார் 2.8 மி.மீ உயரும் வேகத்தை விட, சென்னையின் நிலப்பகுதி உள்வாங்கும் வேகம் 5 மடங்கு அதிகமாக உள்ளது.

சென்னை நிலப்பரப்பு
சென்னை நிலப்பரப்புimage credit-ndtv.com

நிலம் உள்வாங்குவதோடு, கடல் நீர்மட்டம் உயர்வு மற்றும் புயல் சமயங்களில் ஏற்படும் கடல் அலைகளின் சீற்றம் போன்றவை இணைந்து சோழிங்கநல்லூர், சித்தாலப்பாக்கம், அடையாறு, தண்டையார்பேட்டை மற்றும் ஈ.சி.ஆர் (ECR) போன்ற தாழ்வான பகுதிகளைக் கடுமையான வெள்ளப் அபாயத்திற்கு உள்ளாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தி.நகர் மற்றும் மாதவரம் போன்ற உள்நாட்டுப் பகுதிகளிலும் கடல் சீற்றத்தின் போது வெள்ளம் சூழும் அபாயம் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

மென்மையான களிமண் தரை, புவியியல் காரணிகள் மற்றும் அதிவேக நகரமயமாக்கலின் எடையே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இதனுடன் சேர்த்து சென்னையின் கடற்கரையோரம் கடல் மட்டம் ஆண்டுக்கு 2.8 மில்லி மீட்டர் உயர்ந்து வருகிறது. இந்த இரட்டை பாதிப்புகளால் வரும் 2100ம் ஆண்டுக்குள் நகரின் 140 சதுர கிலோ மீட்டருக்கும் அதிகமான பரப்பளவு வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
இயற்கையின் கண்ணாமூச்சி ஆட்டத்தை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?
chennai flood risk

வெள்ளத்தால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 2030-ம் ஆண்டில் 24.5 லட்சமாக இருக்கும் நிலையில் அதுவே 2100-ம் ஆண்டில் வெள்ளத்தால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 98.5 லட்சமாக அதிகரிக்கக்கூடும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

2100-ம் ஆண்டுக்குள் சென்னையில் தாழ்வான கடலோரப் பகுதிகளில் சுமார் 33 சதவீதம் கடுமையான புயல் அலை வெள்ள அபாயத்தில் சிக்கக்கூடும்.

சோழிங்கநல்லூர், சித்தலப்பாக்கம், அடையாறு, தண்டையார்பேட்டை போன்ற பகுதிகள் மிக மோசமான வெள்ள அபாய பகுதிகளாக கண்டறிப்பட்டுள்ளன.

'சைண்டிஃபிக் ரிப்போர்ட்ஸ்' (Scientific Reports) இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வை, ஐ.ஐ.எஸ்.இ.ஆர் மொஹாலி ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். இவர்கள் 2016 முதல் 2024 வரையிலான 'சென்டினல்-1' செயற்கைக்கோள் ரேடார் படங்கள் (Sentinel-1 Satellite Radar Images), மூன்று தசாப்த கால அலை அளவீடுகள், செயற்கைக்கோள் தரவுகள் மற்றும் ஐ.பி.சி.சி (IPCC) காலநிலை கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டு இந்த மாதிரியை உருவாக்கியுள்ளனர். முந்தைய ஆய்வுகள் நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்படுவதே இதற்கு காரணம் என கூறப்பட்ட நிலையில், சமீபத்திய ஆண்டுகளில் நிலத்தடி நீர்மட்டம் நிலையாக அல்லது உயர்ந்துள்ளதால், தற்போதைய நிலப்பரப்பு உள்வாங்குதலுக்கு நிலத்தடி நீர் குறைவு மட்டுமே முதன்மைக்கான காரணம் அல்ல என்பது தெரியவந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
கடல் திடீரென உள்வாங்குவது ஏன் தெரியுமா மக்களே?
chennai flood risk

நிலம் உள்வாங்குவது ஒரு மெதுவான மற்றும் மீட்க முடியாத (Irreversible) செயல்முறையாகும். எனவே சென்னை நகர திட்டமிடலில் இதனை உடனடியாகக் கருத்தில் கொள்ள வேண்டும். முறையான வடிகால் அமைப்பு, கடலோரப் பாதுகாப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், சதுப்பு நில பாதுகாப்பு மற்றும் நகர திட்டமிடலில் நிலம் உள்வாங்குவதை கணக்கில் கொள்வதே இதற்கு தீர்வு என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com