

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க பிரபலமான குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக வாட்ஸ்அப் இருக்கிறது. பயனர்கள் எளிய வகையில் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் அம்சம் இதில் இடம்பெற்றிருப்பதால் அனைவரும் விரும்பும் ஒன்றாக இருக்கிறது.
முதலில் குறுஞ்செய்தி வசதியுடன் தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் பின்னாளில் வாய்ஸ் மெசேஜ், ஆடியோ கால்கள், வீடியோ கால்கள், ஸ்டேட்டஸ் உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளது.
சமீப காலமாக பயனர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் வகையில் வாட்ஸ்அப் மேலும் பல புதுப்புது அம்சங்களை விரிவுபடுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வாட்ஸ்அப் மூலம் மொபைல்களை ரீசார்ஜ் செய்யும் வசதியை கொண்டு வந்திருந்தது. அதனை தொடர்ந்து தற்போது பயனர்கள் பயண டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் புதிய வசதியை கொண்டு வந்துள்ளது.
டெல்லி, பூனே, சென்னை போன்ற அனைத்து மாநிலங்களிலும் மெட்ரோ ரெயில்களில் பயணிக்க, வாட்ஸ்-அப் மூலமாக டிக்கெட் எடுக்கும் வசதியை மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மெட்ரோ ரெயில்களில் பயணிக்க நேரடி பயணச் சீட்டை பெற்றுக் கொள்ளும் முறை , பயண அட்டை முறை, க்யூ ஆர் கோடு மூலம் பணம் செலுத்தி பயணிக்கும் முறை என மூன்று முறைகள் உள்ளன.
இந்நிலையில் மெட்ரோ ரெயில்களில் வாட்ஸ்-அப் மூலமாக டிக்கெட் எடுத்து பயணிக்கும் வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் மொபைல் போனில் உள்ள வாட்ஸ்அப்பில் இருந்து எப்படி மெட்ரோ ரெயில் டிக்கெட் எடுப்பது என்று பார்க்கலாம் வாங்க...
உங்கள் மொபைல் போனில் payments செக்ஷனுக்கு சென்று அதில் Book Ticket என்ற ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்து உள்ளே சென்றால் அதில் அனைத்து மாநில மெட்ரோ ரெயில் சேவைகளை காட்டும்.
அதாவது Pune metro, Nagpur metro, Mumbai metro rail, Chennai metrl rail... இப்படி இருக்கும். அதில் நீங்க எதில் பயணிக்க வேண்டுமே அதை தேர்வு செய்து, எங்கிருந்து எங்கு செல்ல வேண்டும் என்று கேட்கும். அதை செலக்ட் செய்து, எத்தனை பேர் என்று வரும் அதையும் தேர்வு செய்ய வேண்டும். Choose Payment method வரும். அதில் pHonepe, googlepay, Paytm என அனைத்து வரும். அதில் நீங்க எதன் மூலம் பணம் செலுத்த விரும்புகிறீர்கள் என்பதை டிக் செய்து continue கொடுத்த உடன் உங்களுடைய டிக்கெட் உங்கள் போனிலேயே வந்து விடும்.
இனிமேல் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு சென்று டிக்கெட் எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை வாட்ஸ்அப் மூலமாகவே ஈஸியா எடுத்துவிடலாம்.