சென்னை மெட்ரோ பயணிகளுக்கு 20% கட்டணத் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? முழு விபரம் இதோ!

சென்னை மெட்ரோ பயண அட்டை தொலைந்தால் என்ன செய்வது என்பது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
Metro Train
Metro Train
Published on

சென்னை மெட்ரோ ரெயில் சேவை, சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பயண நேரத்தைச் சேமிக்கவும் உதவும் ஒரு விரைவு ரெயில் சேவையாகும். முதல் கட்டமாக 2015-ம் தொடங்கப்பட்ட மெட்ரோ ரெயில் சேவை தற்போது பல வழித்தடங்களில் விரிவடைந்து வருகிறது.

சென்னையில் நாளுக்கு நாள் பெருகி வரும் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு மத்தியில் விரைவான பயணத்துக்கு மெட்ரோ ரெயில்கள் உதவியாக இருக்கின்றனர். குறைந்த நேரத்தில் விரைவாக செல்ல முடியும் என்பதால் இன்று அனைவரின் மிகவும் பிடித்தமான பயணமாக மெட்ரோ ரெயில் சேவை மாறிவிட்டது. சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் 2 வழித்தடத்தில் மெட்ரோ ரெயில்களை இயக்குகின்றன. நீலவழித்தடம் விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை மற்றும் பச்சை வழித்தடம் பரங்கிமலை முதல் சென்ட்ரல் வரை இவை நகரின் முக்கிய பகுதிகளை இணைக்கின்றன. இதில் பயணம் செய்ய பயண அட்டை மூலமாகவும் மற்றும் டிக்கெட் எடுத்தும் பயணம் செய்யலாம்.

இந்நிலையில் சென்னை மெட்ரோ ரெயில் பயணிகள் தாங்கள் பயன்படுத்தும் மெட்ரோ பயண அட்டை மற்றும் சிங்கார சென்னை அட்டைகள் தொலைந்து விட்டால் அந்த அட்டையில் இருக்கும் இருப்பு பணத்தை மாற்ற முடியுமா என்ற சந்தேகங்கள் உள்ளது. இதற்கு தற்போது சென்னை மெட்ரோ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
பயணிகள் கதவில் சிக்குவதை தடுக்க ‘மெட்ரோ ரெயில்’ கதவில் புதிய தொழில்நுட்பம்..!!
Metro Train

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் பயண அட்டை மற்றும் சிங்கார சென்னை அட்டைகள் மெட்ரோ பயணம் மற்றும் வாகனம் நிறுத்தம் கட்டணங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. மெட்ரோ ரெயில் பயண அட்டைகள் மற்றும் சிங்கார சென்னை அட்டைகள் (CMRL Stored Value Cards and Singara Chennai (NCMC) Cards) தொலைந்து விட்டால் அந்த அட்டையில் மீதமுள்ள தொகையை எந்தச் சூழ்நிலையிலும் வேறு அட்டைக்கு மாற்றப்படவோ அல்லது அந்த தொகையை திரும்பப் பெறவோ முடியாது என்று நிர்வாகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதனால் பயணிகள் தங்கள் பயண அட்டைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளது.

தொழில்நுட்ப ரீதியாக, தொலைந்துபோன சிங்கார சென்னை அட்டையின் இருப்புத் தொகையை RBI/NPCI வழிகாட்டுதல்கள் மற்றும் வழங்குநர் கொள்கைகளின்படி திரும்பப் பெற முடியாது.

ஏனெனில் ஒரு அட்டை தொலைந்தால் அது வேறு ஒருவரால் தவறாக பயன்படுத்தபட வாய்ப்புள்ளது என்பதால் பயணிகள் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் மெட்ரோவில் பயணம் செய்யும் பயணிகளுக்கு அவர்களின் பயணக் கட்டணத்தில் 20% வரை தள்ளுபடியை வழங்குகிறது மெட்ரோ நிறுவனம். அந்த வகையில் இந்த தள்ளுபடி யாருக்குக் கிடைக்கும், யாருக்குக் கிடைக்காது என்பது குறித்தும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், Digital SVP, QR குறியீடு பயணச்சீட்டு, Whatsapp - (+91 83000 86000), Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு 20% கட்டணத் தள்ளுபடி கிடைக்கும் என அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
பயணிகள் கவனத்திற்கு..!! இன்று முதல் ஏசி மின்சார ரெயில் சேவையில் மாற்றம்..!
Metro Train

அதேசமயம் மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு கவுண்டர்களில் வாங்கப்படும் ஒற்றைப் பயணத்துக்கான காகித QR பயணச்சீட்டுகளுக்கு (Single Journey Paper QR tickets) இந்தத் தள்ளுபடி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com