பயணிகள் கதவில் சிக்குவதை தடுக்க ‘மெட்ரோ ரெயில்’ கதவில் புதிய தொழில்நுட்பம்..!!

மெட்ரோ ரெயில் பெட்டி கதவுகளிலும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ரூ.48¼ கோடியில் புதிய தொழில்நுட்பம் வரவுள்ளது.
மெட்ரோ ரெயில்
மெட்ரோ ரெயில்
Published on

சென்னையில் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அந்த வகையில் பொதுமக்கள் மின்சார ரெயில்களுக்கு அடுத்தபடியாக மெட்ரோ ரெயிலையே அதிகம் பயன்படுத்துகின்றனர். இதில் கட்டணம் அதிகம் என்றாலும் பயணநேரம் குறைவு என்பதால் மக்களின் விருப்ப தேர்வாகவும், ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து சாதனமாகவும் மெட்ரோ ரெயில் சேவை உள்ளது. அதுமட்டுமின்றி மெட்ரோ ரெயில்கள் நகரின் பல்வேறு முக்கிய பகுதிகளை இணைப்பதுடன், போக்குவரத்தை நெரிசலை குறைப்பதிலும், துரித பயணத்தை மேற்கொள்வதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

பயணிகள் வசதிக்காக தினமும் அதிகாலை 4:30 மணி முதல் இரவு 11:00 மணி வரை மெட்ரோ ரெயில் இயங்கப்படுகிறது. அந்த வகையில் அதில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பிற்காக மெட்ரோ ரெயிலில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மெட்ரோ ரெயில் கதவுகளில், சுடிதார் துப்பட்டா, சேலைகள், பெல்ட்கள், பை பட்டைகள், பாட்டில் பட்டைகள் சிக்கிக் கொள்ளும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கின்றன.

ஆனால் விபத்துகள் எதுவும் இதுவரை நடக்கவில்லை. இதுபோன்று பயணிகள் கதவில் சிக்குவதைத் தடுக்க 52 மெட்ரோ ரெயில்களில் அனைத்து பெட்டி கதவுகளிலும், 'ஆண்டி டிராக் ப்யூச்சர்' (Anti Drag Passenger Door Safety System)எனும் புதிய தொழில்நுட்பம் கொண்ட அமைப்பை நிறுவுவதற்கான ரூ.48.33 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை மெட்ரோ நிறுவனம் தனியார் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.

அந்த வகையில், சென்னை மெட்ரோ ரெயில் பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் நீல மற்றும் பச்சை வழித்தடங்களில் இயங்கும் மெட்ரோ ரெயில்களில் அனைத்து பெட்டி கதவுகளிலும் இதை நிறுவுவதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் ஆகும். தற்போது, மெட்ரோ ரெயில் கதவுகளில் 10 மி.மீ., அளவிலான துணி, பை பட்டைகள் சிக்கினால்தான் சென்சாரில் பதிவாகும். ஆனால் புது தொழில்நுட்பத்தில், 0.3 மி.மீ., அளவிலான எது சிக்கினாலும் சென்சார் உள்வாங்கும் என்பதால் விபத்துகள் ஏற்படாது. இந்த புதிய அமைப்பின் தனிச்சிறப்பு என்னவென்றால், இது இழுத்துச் செல்லும் விசையைக் கண்டறியும் திறன் கொண்டது.

அந்த வகையில் இந்த புதிய ஒப்பந்தம் மூலம் நிறுவப்படும் சாதனத்தால், ஒரு நபர் அல்லது சுடிதார் துப்பட்டா, சேலைகள், பெல்ட்கள், பை பட்டைகள், பாட்டில் பட்டைகள் உள்ளிட்டவை கதவில் சிக்கிக் கொண்ட நிலையில் சம்பந்தப்பட்டோர் இழுத்துச் செல்லப்படாமல் மெட்ரோ ரெயில் தானாகவே அதன் அவசரகால பிரேக்கை அழுத்தும், ரெயில் உடனடியாக நிறுத்தப்படும்.

இதையும் படியுங்கள்:
விரிவுபடுத்தப்படும் மெட்ரோ ரயில் சேவை..! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க..!
மெட்ரோ ரெயில்

அதுமட்டுமின்றி, இது உடனடியாக மெட்ரோ ரயில் ஓட்டுநரின் கவனத்திற்கு செல்லும். இதன் மூலம் ஓட்டுநர் விரைவாகவும் உடனடியாகவும் நடவடிக்கை எடுக்க முடியும். இதன் மூலம், குறிப்பாக பெண்களின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்து, அனைத்துப் பயணிகளுக்கும் மேம்பட்ட பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்ய முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com