மெட்ரோ பயணிகள் கவனத்திற்கு – 500 வாகனங்களுக்கான பெரிய நிறுத்துமிடம் தயார்!

மெட்ரோ
மெட்ரோ
Published on

நங்கநல்லூர் மெட்ரோ நிலையத்தில் புதிய வாகன நிறுத்தமிடம் அமைக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் நங்கநல்லூர் மெட்ரோ நிலையத்திற்கு அருகில் இதுவரை இல்லாத ஒரு பெரிய வாகன வசதிக்கான இடத்தை ஏற்படுத்த திட்டமிட்ட உள்ளது. இந்த புதிய வாகன நிறுத்ததத்தில் சுமார் 500 வாகனங்களை நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்படும். இதை சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் தனது சமீபத்திய செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

நங்கநல்லூர் ரோடு மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகில் இதுவரை வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான இடம் இல்லை. இந்த தேவைக்காக பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து கோரிக்கைகல் வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இந்த புதிய வசதியை மெட்ரோ பயணிகளுக்கு ஏற்படுத்தித்தர முன் வந்துள்ளது.

இதற்கு முன்னால் இந்த மெட்ரோ இரயில் நிலையத்திற்கு அருகில் ஒரு பிரபலமான உணவகம் செயல்பட்டு வந்தது. அந்த உணவகம் அரசு நிலத்தில் செயல்பட்டு வந்த நிலையில் அதற்கான குத்தகை காலம் சமீபத்தில் முடிந்து விட்டது. அந்த உணவகத்தை மாவட்ட நிரவாகம் சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தின் ஆணைக்கு உட்பட்டு சமீபத்தில் இடித்து தள்ளியது.

அதனால் காலியாக உள்ள அந்த இடத்தில் இப்பொழுது இந்த மெட்ரோ வாகன வசதி நிலையம் அமைக்கப்படும் என்று அறியப்படுகிறது. அந்த இடத்தை மாநில அரசு இப்பொழுது சென்னை மெட்ரோ ரயில் நிலையத்திடம்ஒப்படைத்துள்ளதாகவும், இது நங்கநல்லூர் ரோடு மெட்ரோ ரயில் நிலையத்திற்கான வாகன நிறுத்துமிடமாக செயல்படுவதற்கான வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் எனவும் சென்னை மெட்ரோ நிறுவன அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த நிலத்தின் பரப்பளவு சுமார் நான் 40,000 சதுர அடி ஆகும். சுமார் 500 வாகனங்களை நிறுத்துவதற்கு இந்த புதிய வாகன நிறுத்தம் இடம் உதவுகரமான இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

அடுத்த சில மாதங்களில் இந்த இடம் சீரமைக்கப்பட்டு வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்ப தரைத்தளம், சாய்வு தளம் போன்ற பிற தேவையான பிற வசதிகளையும் ஏற்படுத்தி பயணிகளுடைய பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய வாகனம் இருக்கும் இடத்திலிருந்து மெட்ரோ ரயில் நிலையத்திற்கு நடந்து செல்ல சுமார் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகமாகும் என்றும் கூறப்படுகிறது. இது நகர்ப்புற போக்குவரத்து பயன்பாட்டை அதிகரிக்கவும் அப்பகுதியில் உள்ள மக்களின் அன்றாட மெட்ரோ இரயில் பயணங்களுக்கும் ஒரு பெரிய நல்வாய்ப்பாகவும் அமையும். இத்திட்டம் விரைவில் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் அறிவித்திருப்பதால் நங்கநல்லூர் மற்றும் ஆலந்தூர் பகுதி மக்களுக்கு பெருத்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதையும் படியுங்கள்:
அடுத்த சீசனில் தோனி விளையாடுவாரா..? சென்னை அணியின் சிஇஓ ஓபன் டாக்..!
மெட்ரோ

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com