
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை துவங்கியது முதல் லட்சக்கணக்கான பயணிகள் தினமும் அந்த மெட்ரோ சேவையை பயன்படுத்தி வருகின்றனர். தினமும் வேலைக்கு செல்பவர்கள் முதல் சென்னைக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் வரை பலர் இந்த மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க பல்வேறு வகையான டிக்கெட் ஆப்ஷன்கள் உள்ளன.நேரடியாக கவுண்டரில் சென்று டிக்கெட் எடுப்பது மட்டுமல்லாமல் ஆன்லைன் மூலமும் வாட்ஸ் அப் மூலமும் கூட டிக்கெட் எடுக்க முடியும். தற்போது இந்த ஆப்ஷன் உடன் கூடுதலாக உபர் ஆப் மூலமும் டிக்கெட் எடுக்கலாம்.
தற்போது, ஊபர் செயலியிலும் இனி சென்னை மெட்ரோ ரெயில் டிக்கெட்டுகளை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊபர் செயலி மூலம் இன்று முதல் ஆகஸ்ட் 31 வரை 50 சதவீதம் சலுகை விலையில் மெட்ரோ டிக்கெட்டை பெறலாம். (QR - Codeஐ) க்கியூஆர் கோர்டை பயன்படுத்தி மெட்ரோ ரெயில் டிக்கெட்டை பெறலாம். இந்த செயல்பாடு ONDC இன் இயங்கக்கூடிய நெட்வொர்க் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது.மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு செல்லவும், திரும்பவும் பயணக்கட்டணத்திலும் 50சதவீதம் சலுகை அறிவித்துள்ளது.
ஆட்டோ, கார், டூ வீலர் முன்பதிவு செய்யும் ஊபர் செயலிலேயே மெட்ரோ ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் டெல்லியில் ஊபர் செயலி மூலம் மெட்ரோ டிக்கெட் பெறும் வசதி கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், இந்தியாவின் இரண்டாவதாக இந்த சேவை சென்னைக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லிக்கு அடுத்து ஊபர் செயலி மூலம் மெட்ரோ டிக்கெட் வசதியை பெறும் 2வது நகரம் சென்னையாகும்.