சென்னை மக்களுக்கு குட் நியூஸ்..! விரைவில் பூந்தமல்லி - வடபழனி இடையே மெட்ரோ சேவை..!

metro train
metro train
Published on

சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் முதல் கட்டம் 45.046 கிமீல், இரண்டு வழித்தடங்களைக் கொண்டுள்ளது.வழித்தடம் 1 ஆனது வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையும் (23.085 கி. மீ) வழித்தடம் 2 ஆனது சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையும் (21.961 km) இணைக்கப்பட்டுள்ளது இந்த முதல் கட்டத்தில் உள்ள 32 நிலையங்களில், 19 சுரங்க நிலையங்களாகவும் (சுமார் 55%), மீதமுள்ள 13 உயர்த்தப்பட்ட நிலையங்களாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு வழித்தடங்கள் இடையே மாறி பயணம் செய்யும் வசதி ஆலந்தூர்(உயர்த்தப்பட்ட) மற்றும் சென்னை சென்ட்ரல் (சுரங்கம்) நிலையங்களில் உள்ளது.

மெட்ரோ இரயில் திட்டத்தின் நிலை 1 ஆனது பல்வேறு கட்டங்களாக தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரையிலான நிலையங்கள் 29 ஜூன் 2015 அன்று திறக்கப்பட்டது. சின்னமலை முதல் விமான நிலை வரை உள்ள நிலையங்களானது 21 செப்டம்பர் 2016 அன்றும்,பரங்கிமலை நிலையமானது 14 அக்டோபர் 2016 அன்றும் திறக்கப்பட்டது. திருமங்கலம் மெட்ரோ நிலையத்திலிருந்து நேரு பூங்கா மெட்ரோ நிலையத்திற்கு இடையிலான முதல் சுரங்க பாதை 14 மே 2017 அன்று திறக்கப்பட்டது.

எழும்பூர் மெட்ரோ நிலையம் முதல் சென்னை சென்ட்ரல் மெட்ரோ நிலையம் வரை மற்றும் சைதாப்பேட்டை மெட்ரோ நிலையம் முதல் ஏஜி-டிஎம்எஸ் மெட்ரோ நிலையம் வரையிலான சுரங்கப் பகுதிகள் ஓராண்டுக்குப் பிறகு 2018 மே 25 அன்று திறக்கப்பட்டது. மெட்ரோ இரயில் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் ஆயிரம் விளக்கு முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான நீல வழித்தடத்தின் சுரங்க பாதை 2019 பிப்ரவரி 10 அன்று திறக்கப்பட்டது. சார் தியாகராய கல்லூரி மெட்ரோ நிலையம் முதல் விம்கோநகர் பணிமனை வரையிலான நிலையங்கள் 14 பிப்ரவரி 2021 அன்று பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. அவற்றுள் திருவொற்றியூர் தேரடி மற்றும் விம்கோநகர் பணிமனை மெட்ரோ நிலையங்கள் 13 மார்ச் 2022 அன்று பயன்பாட்டிற்கு வந்தது.

முதற்கட்ட விரிவாக்கமானது, வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை சுமார் 9.05 கி. மீ தொலைவை உள்ளடக்கியது. இதில்,7 உயர்த்தப்பட்ட நிலையங்களும், 2 சுரங்க நிலையங்களும் மற்றும் ஒரு உயர்த்தப்பட்ட பணிமனையும் உள்ளது.திருவொற்றியூர் தேரடி மெட்ரோ நிலையம் மற்றும் விம்கோ நகர் பணிமனை நிலையம் தவிர, இதர நிலையங்களை உள்ளடக்கிய வண்ணாரப்பேட்டை மெட்ரோ நிலையம் முதல் விம்கோநகர் பணிமனை வரையிலான வழித்தடம் 14 பிப்ரவரி 2021 அன்று பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. அவற்றுள் திருவொற்றியூர் தேரடி மற்றும் விம்கோநகர் பணிமனை மெட்ரோ நிலையங்கள் 13 மார்ச் 2022 அன்று பயன்பாட்டிற்கு வந்தது.

இரண்டாம் கட்ட விரிவாக்கம் 128 நிலையங்களுடன் 118.9 கி. மீ. நீளத்திற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது மூன்று வழித்தடங்களைக் கொண்டுள்ளது (i.e) வழித்தடம்-3 மாதவரம் முதல் சிப்காட் வரை (45.8 கி. மீ) , வழித்தடம்-4 கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை (26.1 கி. மீ) , வழித்தடம்-5 மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை (47 கி. மீ). இந்த திட்டத்தின் மதிப்பிடப்பட்ட செலவு (கட்டுமானத்தின்போது வட்டி செலவினம் உட்பட) ரூபாய் 63246 கோடி (அறுபத்து மூன்றாயிரத்து இருநூற்று நாற்பத்தாறு கோடி ரூபாய் மட்டுமே) ஆகும். இந்த முன்மொழிவு இந்திய அரசின் செயல்முறை மற்றும் ஒப்புதலின் கீழ் உள்ளது.இத்திட்டம் 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மண் பரிசோதனை முழுமையாக முடிக்கப்பட்டு விரிவான வடிவமைப்பு பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன. மாநில அரசு வழங்கிய நிர்வாக ஒப்புதலின் அடிப்படையில், வழித்தடம் 3-இல் நிலத்தடி சுரங்கப்பாதை மற்றும் உயர்த்தப்பட்ட பாதைப் பணிகளுக்கும், வழித்தடம் 4-இல் உயர்த்தப்பட்ட, சுரங்க வழிப்பாதை, பணிமனை மற்றும் இருப்புப்பாதை பணிகளுக்கும், மற்றும் வழித்தடம் 5-இல் உயர்த்தப்பட்ட பாதை கட்டுமானத்திற்கான ஓப்பந்தங்களும் ஏற்கனவே வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதையும் படியுங்கள்:
பொங்கல் பரிசு ரூ.3,000-ஐ அரசுக்கே திருப்பி அனுப்பிய நெல்லை கிறிஸ்டோபர்..! காரணம் இது தான்..!
metro train

சென்னையில் 116 கிலோ மீட்டர் தொலைவிற்கு தற்போது மூன்று வழித்தடங்களில் மெட்ரோ பணிகள் நடந்து வருகின்றன.இதில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் சுமார் 26 கிலோமீட்டர் அமைந்துள்ளது. இதில் பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான 10 கிலோமீட்டர் தொலைவிற்கு பணிகள் நடந்து முடிந்துள்ளன இந்த பூந்தமல்லி போரூர் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையிலான மெட்ரோல் ரயில் சேவையை தொடங்குவதற்கு பாதுகாப்புச் சான்றிதழையும் ரயில்வே வாரியம் ஏற்கெனவே வழங்கி விட்டது.

இதற்கிடையில் போரூருக்கும் வடபழனிக்கும் இடையிலான மெட்ரோ பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டநிலையில், கடந்த 11ம் தேதி சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. அப்போது சிக்னல் அமைப்பு, தண்டவாளத்தின் செயல் திறன், ரயில் இயக்கத்தின் உறுதி தன்மை போன்றவையும் சோதிக்கப்பட்டன. இதனால் பூந்தமல்லிக்கும் வடபழனிக்கும் இடையிலான மெட்ரோ ரயில் சேவையை இயக்குவதற்கான அனைத்துப் பணிகளையும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முழுமையாக முடித்துள்ளது.

இதைத்தொடர்ந்து பூந்தமல்லிக்கும் வடபழனிக்கும் இடையிலான வழித்தடத்தில் பிப்ரவரி மாதம் மெட்ரோ ரயில் சேவை தொடங்க வாய்ப்புகள் உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது..எனவே, பிப்ரவரி மாதம் இந்த வழித்தடத்தில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:- பூந்தமல்லி - வடபழனி சோதனை பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளது. ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் குறிப்பிட்ட வழித்தடம், பயணிகள் வசதி உள்ளிட்டவைகளை ஆய்வு செய்த பின்னர் அவருடைய ஆய்வுக் குறிப்புகள் ரெயில்வே வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இதைத்தொடர்ந்து, பூந்தமல்லி - வடபழனி இடையே பயணிகள் ரெயில் சேவையை தொடங்குவதற்கான அனுமதியை வழங்கும். பிப்ரவரி மாதம் இவ்வழித்தடத்தில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்:
இனி ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது... டெல்லி போலீசாரின் கையில் 'AI' ஸ்மார்ட் கண்ணாடிகள்!
metro train

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com