

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தமிழக முழுக்க ஒரே கட்டமாக நாளை நடைபெற உள்ளது. சட்டமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்னையில் வசிக்கும் பலரும் , சொந்த ஊருக்கு செல்ல ஒரே நாளில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இதனால் இன்று காலை முதலிலேயே சென்னை கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கடும் கூட்ட நெரிசல் காணப்பட்டது. அரசாங்கம் சிறப்பு பேருந்துகளை இயக்கினாலும் , கூட்டம் அதிகமாக இருப்பதால் மக்கள் பேருந்துகளில் இடம் கிடைக்காமல் தவிக்கின்றனர்.
பேருந்து நிலையங்களில் மட்டுமல்லாமல் ரயில் நிலையங்களிலும் கடுமையான மக்கள் கூட்டம் அலைமோதி கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு வாக்களிப்பதற்காக மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை மத்திய ரயில் நிலையம் , எழும்பூர் ரயில் நிலையம் மட்டுமல்லாமல் பல புறநகர் ரயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
பொதுப் போக்குவரத்து நிலையங்களில் மட்டுமல்லாமல், சென்னை மாநகர சாலைகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து வாகனங்கள் மூலமாக மக்கள் வெளியேறுவதால் பல பகுதிகளில் டிராபிக் ஜாம் ஆகியுள்ளது.