
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நேப்பியர் பாலம் முதல் கோவளம் வரை சுமார் 53 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாட்டர் மெட்ரோ சேவை தொடங்கப்பட உள்ளது. பெருகிவரும் போக்குவரத்து நெரிசல் எத்தனையோ புதிய பாலங்கள் கட்டியும் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியவில்லை.
வாட்டர் மெட்ரோ என்பது ரயில் போன்று சகல வசதிகளுடன் நீரில் செல்லக்கூடிய படகு போக்குவரத்து வாகனம். கேரள மாநிலம் கொச்சியில் 2023 ஆம் ஆண்டு இந்த வாட்டர் மெட்ரோ போக்குவரத்து தொடங்கப்பட்டது. கொச்சியில் 16 வழித்தடங்கள் இருந்தும் தற்போது நான்கு இடங்களில் இந்த வாட்டர் மெட்ரோ போக்குவரத்து நடைபெறுகிறது.
சென்னையிலும் இதேபோன்று போக்குவரத்து திட்டத்தை அமல்படுத்தினால் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று நம்பப்படுகிறது. சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம், நீர்வள ஆதாரத்துறை மற்றும் கடல் சார் வாரியம் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
சென்னையில் கூவம் கோவளம் இடையே உள்ள பக்கிம்ஹாம் கால்வாயை முதலில் தூர்வார வேண்டும். கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஆழம் குறைவான இடங்களில் ஆழப்படுத்த வேண்டும். இந்த திட்டத்திற்கு 3000 கோடி முதல் 5000 கோடி வரை செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டம் நிலப்பரப்பில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். தமிழகத்தில் 10 நீர் வழி பாதை அடையாளம் காணப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். நாளுக்கு நாள் பெருகி வரும் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க இத்திட்டம் பேர் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். இத்திட்டத்தின் மூலம் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும்.