இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்! சென்னையில் எகிறிய சிலிண்டர் விலை!

Gas Cylinder Price
Gas Cylinder Price
Published on

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கபடைகள் ஈரானுக்கு எதிராகபோரை தொடங்கியுள்ளதால், உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக, ஈரான் 'ஹார்முஸ் ஜலசந்தியை' (Strait of Hormuz) மூடியுள்ளதால், கச்சா எண்ணெய் விநியோகம் முடங்கியுள்ளது. இதன் நேரடி பாதிப்பு இப்போது இந்தியாவிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் சிலிண்டர் விலை நள்ளிரவு முதல் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது

நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விலை மாற்றத்தின்படி, வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ சிலிண்டரின் விலை ₹60 உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை ₹868.50-க்கு விற்கப்பட்ட ஒரு சிலிண்டர், இனி ₹928.50 (சுமார் ₹929) என்ற விலைக்கு விற்பனை செய்யப்படும்.

வணிக நிறுவனங்கள் மற்றும் உணவகங்கள் பயன்படுத்தும் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை ஒரே அடியாக ₹115 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இதன் விலை ₹2,043.50 (சுமார் ₹2,044) ஆக உயர்ந்துள்ளது. மற்ற முக்கிய நகரங்களான டெல்லியில் ₹1,883 மற்றும் மும்பையில் ₹1,835 எனப் புதிய விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

ஒரே வாரத்தில் இரட்டைப் பாதிப்பு:

ஏற்கனவே கடந்த மார்ச் 1-ஆம் தேதி வணிக சிலிண்டர் விலை ₹30 உயர்த்தப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் ₹115 உயர்த்தப்பட்டிருப்பதன் மூலம், ஒரே வாரத்தில் மட்டும் மொத்தம் ₹145 வரை விலை எகிறியுள்ளது. இது வணிகர்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பொருளாதார தாக்கம்:

எரிபொருள் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும், ஹோட்டல் உணவுகளின் விலையும் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
செய்தி சேனல்களுக்கு ‘செக்’..! TRP ரேட்டிங்கை நிறுத்தி வைக்க மத்திய அரசு உத்தரவு..!
Gas Cylinder Price

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com