செய்தி சேனல்களுக்கு ‘செக்’..! TRP ரேட்டிங்கை நிறுத்தி வைக்க மத்திய அரசு உத்தரவு..!

Central government
Central government
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

தொலைக்காட்சி சேனல்களுக்கான தொலைக்காட்சி மதிப்பீட்டு புள்ளிகள் அறிக்கையை BARC நிறுவனம் வெளியிட்டு வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அடுத்த 4 வாரங்களுக்கு அல்லது மறு அறிவிப்பு வரும் வரை செய்தி சேனல்களுடைய டிஆர்பி ரேட்டிங்கை வெளியிடுவதை நிறுத்தி வைக்க மத்திய அரசு பார்க் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. காரணம் சில செய்தி சேனல்கள் போர் தொடர்பாக தேவையற்ற செய்திகளை பரப்பி பதற்றத்தை உண்டு பண்ணுவதால் டிஆர்பி(TRP) ரேட்டிங் வெளியிடுவதை நிறுத்தி வைக்க BARC நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை வெளியிட்டுள்ள விளக்கத்தில், இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பாக சில தொலைக்காட்சி செய்தி சேனல்கள் தேவையற்ற பரபரப்பு மற்றும் ஊகங்களை ஏற்படுத்தும் தகவல்களை வெளியிடுவதால், போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுடைய குடும்பத்தவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகின்றனர். இம்மாதிரி தேவையற்ற பீதியை பரப்பும் நிகழ்வுகளை தடுப்பதற்கும், மக்களுடைய பொது நலனை உறுதி செய்யவும் அடுத்த 4 வாரங்களுக்கு அல்லது மறு அறிவிப்பு வரும் வரை டிஆர்பி ரேட்டிங் வெளியிடுவதை நிறுத்துவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

எனவே, பொது நலனை உறுதி செய்யவும், ஒளிபரப்பு ஊடகங்கள் மூலம் பீதி பரவுவதை தடுக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு, இந்தியாவில் தொலைக்காட்சி மதிப்பீட்டு நிறுவனங்களுக்கான கொள்கை வழிகாட்டுதல்களை பின்பற்றி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
ரூ.20 கோடி பரிசு வாங்கியவருக்கா? எடுத்தவருக்கா? - கேரளாவையே அதிரவைத்த அந்த 'ஒரு' லாட்டரி சீட்டு..!
Central government
logo
Kalki Online
kalkionline.com