உதயம் தியேட்டர் - ஒரு சகாப்தம் சுக்குநூறாக நொறுங்கிய காட்சிகள் வைரல்!

udhayam theatre
udhayam theatre
Published on

சென்னையின் அடையாளமாக திகழ்ந்த உதயம் தியேட்டர் சுக்குநூறாக நொறுங்கி விழும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கண்கலங்க செய்துள்ளது.

பொதுவாகவே தியேட்டர் என்றாலே சந்தோஷமும், ஆட்டம் பாட்டம் தான். அப்படி சென்னையில் 80ஸ், 90ஸ் கிட்ஸ்கள் மத்தியில் பிரபலமான தியேட்டரில் ஒன்று உதயம் தியேட்டர். இன்றளவும் எத்தனை தியேட்டர்கள் வந்தாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தது உதயம் தியேட்டர் தான். சுமார் 40,000 சதுர அடியில் 1.31 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் மிக முக்கிய பகுதிகளுள் ஒன்றான அசோக் நகரில் அமைந்துள்ளது உதயம் திரையரங்கம். இந்த தியேட்டர் 1983ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த திரையரங்கில் உதயம், மினி உதயம், சந்திரன், சூரிய ஆகிய திரைகள் வெற்றிகரமாக இயங்கி வந்தன.

ஒவ்வொரு திரையரங்கிலும் குளிரூட்டி வசதி அமைக்கப்பட்டுள்ளது. அதோடு டிடிஎஸ் ஒலிபெருக்கியும் பொருத்தப்பட்டுள்ளது. ஆரம்பகாலத்தில் 6 சகோதரர்களால் பராமரிக்கப்பட்டு வந்த இந்த திரையரங்கம் ஏலத்திற்கு பிறகு ஒரே ஒரு நபரால் வாங்கப்பட்டது. 90ஸ் கால கட்டங்களில் கூட்டம் அலைமோதி கொண்டிருந்த நிலையில், 2020ஆம் ஆண்டுக்கு பிறகு கூட்டம் படிப்படியாக குறைய ஆரம்பித்தது. புது புது தியேட்டர்கள் நவீன முறைக்கு மாறிவந்த நிலையிலும் உதயம் தியேட்டர் மட்டும் பழைய நடைமுறையே பின்பற்றி வந்தது. அதனாலேயே கூட்டம் குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
நடுத்தர மக்கள் கொண்டாடிய குடும்பஸ்தன்... ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!
udhayam theatre

காதலர்கள், நண்பர்கள் என பலருக்கும் நினைவு மாளிகையாக இருந்த உதயம் தியேட்டர் தற்போது இடிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் வேதனை தெரிவித்து வருகின்றனர். உதயம் தியேட்டர் மூடப்படும் என கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து நேற்று இந்த தியேட்டர் இடிக்கப்பட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த உதயம் தியேட்டர் இருந்த இடத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

என்னதான் எவ்வளவு பெரிய மாடி வீடு வந்தாலும் தியேட்டரின் நினைவு மறையாது என ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். உதயம் தியேட்டருல என் இதயத்த தொலைச்சேன் என தேவாவின் பாடல் இன்றளவும் பேமஸாக இருக்கும் நிலையில், உதயம் தியேட்டரையே தொலைச்சுட்டோம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com