

புகழ்பெற்ற லான்செட் மருத்துவ இதழே இந்த ஆய்வை வெளியிட்டிருக்கு! மருத்துவத் துறையில் இவ்வளவு பெரிய சந்தேகம் வந்திருக்குன்னா, நாம ரொம்பவே உஷாரா இருக்கணும். .
முதல்ல பிரச்னை என்னன்னு தெரிஞ்சுக்கோங்க!
பொதுவா, காசநோய் (TB) ஒழிப்புத் திட்டத்துல ஒரு பெரிய குறைபாடு இருக்கு. உலக சுகாதார நிறுவனம் (WHO) சொல்றது என்னன்னா, உலகத்துல சுமார் 10.8 மில்லியன் (ஒரு கோடிக்கும் அதிகமான) டி.பி. நோயாளிகள் இருக்காங்க.
இதுல ஒரு பெரிய ஷாக் என்னன்னா, சுமார் 2.7 மில்லியன் பேர் (25%) இன்னும் யாருன்னு கண்டுபிடிக்கப்படாம, சிகிச்சை கிடைக்காம சுத்திக்கிட்டு இருக்காங்க! இவங்களைத்தான் 'மறைந்திருக்கும் டி.பி. நோயாளிகள்' ன்னு சொல்றாங்க.
பிரச்னை இதுதான்:
இவங்ககிட்ட சளி, காய்ச்சல், இருமல்னு எந்த அறிகுறியும் இருக்காது.
அதனால, இவங்க சாதாரணமாகச் சமூகத்துல இயங்கி, மற்றவங்களுக்குத் தெரியாம டி.பி. கிருமியைப் பரப்பிக்கிட்டே இருப்பாங்க.
இந்தப் பின்னணியில்தான், லான்செட் ஆய்வாளர்கள் நம்மளை அதிர்ச்சியடைய வெச்சிருக்காங்க!
எக்ஸ்ரே ஏன் ஏமாத்துது?
தென்னாப்பிரிக்காவுல டி.பி. உள்ளவங்க வீடுகள்ல இருந்த 979 பேரை ஆய்வாளர்கள் பரிசோதிச்சாங்க.
அவங்க வீடுகள்ல டி.பி. வர்றதுக்கான வாய்ப்பு அதிகம் இல்லையா?
ஆய்வின் முடிவுகள் – பகீர் தகவல்:
80% பேருக்கு அறிகுறியே இல்லை: டி.பி. உறுதி செய்யப்பட்ட புது நோயாளிகள்ல 80% க்கும் அதிகமானோருக்கு (82.4%) சளி, காய்ச்சல்னு எந்த அறிகுறியுமே இல்லை.
எக்ஸ்ரேயோட தோல்வி: அறிகுறிகள் இல்லாத இந்த நோயாளிகளை நாம வழக்கமா எடுக்கும் மார்பு எக்ஸ்ரே (Chest X-ray) மூலம் கண்டுபிடிக்கவே முடியல!
கிட்டத்தட்ட 40% க்கும் மேல உள்ள நோயாளிகளை எக்ஸ்ரே மிஸ் பண்ணிடுச்சு.
டாக்டர் சைமன் சி. மெண்டெல்சன் சொன்னது: "அறிகுறி இல்லாத டி.பி. நோயாளிகளை எக்ஸ்ரே பரிசோதனை மூலம் பார்ப்பது, ஒருபோதும் துல்லியமானதல்ல. ஏன்னா, 40% கேஸ்களை எக்ஸ்ரே தவற விட்டுடுச்சு."
WHO-வோட இலக்கு என்ன?
ஒரு டி.பி. பரிசோதனைன்னா, அதோட துல்லியம் (Sensitivity) குறைஞ்சது 90% இருக்கணும்னு WHO ஒரு இலக்கு வெச்சிருக்கு.
ஆனா, எக்ஸ்ரேயோட செயல்திறன் வெறும் 56% தான் இருக்கு. அறிகுறியையும் எக்ஸ்ரேயையும் சேர்த்தா கூட 64% ஐதான் தொடுதாம்!
விழிப்புணர்வு செய்தி: இனிமேல், உங்களுக்கு ஒரு அறிகுறியும் இல்லை, எக்ஸ்ரே நார்மலா இருக்கு என்பதற்காக, உங்களுக்கு டி.பி. இல்லைன்னு நினைச்சுக்க முடியாது.
அப்போ என்னதான் செய்யணும்?
இந்த ஆய்வாளர்கள் ஒரே ஒரு முக்கியமான விஷயத்தைத்தான் சொல்றாங்க:
சாதாரணப் பரிசோதனை முறைகள் நம்பகமானதா இல்லை. அதனால, நாம் எல்லாரும் இந்த விஷயத்தைப் புரிஞ்சிகிட்டு, அறிகுறிகள் இல்லைன்னாலும் டி.பி. பரவும் அபாயம் உள்ளவர்கள், கட்டாயம் சளியைப் பரிசோதனை செஞ்சு பாத்துக்கிறது ரொம்பவே நல்லது.