பிரச்சாரத்திற்கு வட மாநிலங்கள் செல்கிறாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?

MK Stalin Speech
MK Stalin
Published on

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக சென்ற 19ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து, இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்வதற்காக வட மாநிலங்களுக்குச் செல்லவுள்ளார் என்று செய்திகள் வெளியாகிவுள்ளன.

தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட இந்தியாவின் பல தொகுதிகளில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் மொத்தம் 64 சதவீத மக்கள் வாக்குப்பதிவு செய்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்தியா முழுவதும் 102 தொகுதிகளில், லோக்சபா தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. அதாவது, தமிழகம், உத்தரகண்ட், அருணாசல பிரதேசம், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம் உட்பட மொத்தம் 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதற்காக ஒரு லட்சத்து 87 ஆயிரம் வாக்குச்சாவடிகள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டன.

திரிபுரா மாநிலத்தில் 80.6 சதவீத வாக்குகள் அதிகபட்சமாக பதிவாகின. அதேபோல் மிகக் குறைவாக பீகார் மாநிலத்தில் 48.5 சதவீதம் மட்டுமே வாக்குப் பதிவானது. தமிழகத்தைப் பொறுத்தவரை 72.9 சதவீத மக்கள் வாக்குப்பதிவு செய்தனர். அதிகபட்சமாக தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 81.04 சதவீதம் வாக்குப்பதிவானது.

அந்தவகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் 40 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். கடந்த மார்ச் 22ம் தேதி முதல் இந்த மாதம் 17ம் தேதி வரை 20 பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களில் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் பேசினார். பொதுக்கூட்டங்கள், பிரச்சாரம் மட்டுமின்றி காலையில் நடைப்பயிற்சியின் போதும் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

இந்தியாவின் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், இன்னும் 6 கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெறவுள்ளன. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.

இதையும் படியுங்கள்:
தொடரும் இஸ்ரேல்-ஹிஸ்புல்லா போர்… மேலும் 2 பேர் பலி!
MK Stalin Speech

இந்தநிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அரசியல் கட்சித் தலைவர்கள், கூட்டணி கட்சியினர், மாவட்ட  கழக செயலாளர்கள், அமைச்சர்கள் என அனைவரும் சந்தித்து பேசி வருகின்றனர். அவர்களுடன் பேசும்போதுதான், முதலமைச்சர் வட மாநிலங்களுக்கு சென்று பிரச்சாரம் செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் பிரச்சாரம் செய்ய முதலமைச்சர் திட்டம் செய்துள்ளார். இந்தப் பயணத்திற்கான தேதிகள், இடங்கள் என அனைத்து விவரங்களும் தயாராகி வருகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com