தொடரும் இஸ்ரேல்-ஹிஸ்புல்லா போர்… மேலும் 2 பேர் பலி!

Isreal Vs Hezbollah
Isreal Vs Hezbollah

ஈரான் ஆதரிக்கும் ஹிஸ்புல்லா அமைப்பு நேற்று முன்தினம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இந்தநிலையில், இன்று காலை இஸ்ரேல், ஹிஸ்புல்லா அமைப்பின் மீது பதில் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் 2 பேர் பலியாகியுள்ளனர்.

பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்குள் நுழைந்து திடீர் தாக்குதலை நடத்தினர். இதனால் கோபமடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என்று  சபதம் எடுத்தது. இதனால், இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 6 மாத காலமாக போர் நடைபெற்று வருகிறது. இவர்களின் போரை நிறுத்த கோரி பல உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இஸ்ரேல் போர் முடிவை கைவிட மறுக்கிறது.

இதற்கிடையே ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவாக இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பு ஈரானில் உள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பைத் தாக்க இஸ்ரேல், ஈரான் தூதரகத்தைத் தாக்கியது. இதில் ஈரானின் உயர் அதிகாரிகள் உட்பட சிலர் உயிரிழந்தனர். ஹிஸ்புல்லா அமைப்பை தாக்கத்தான் நாங்கள் நினைத்தோம், ஈரானை தாக்க எண்ணவில்லை என்று இஸ்ரேல் மறைமுகமாகக் கூறியும் ஈரான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதேபோல், ஈரானும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு நிதியுதவி உட்பட பல உதவிகளை செய்துவருகிறது.

இதனால் ஈரான்- இஸ்ரேல் போரும் தொடங்கியது. இதனையடுத்து இருவரும் மாறி மாறி பதிலடி கொடுத்து வருகின்றன. அந்தவகையில், நேற்று முன்தினம் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை நடத்தியது. ஹிஸ்புல்லா அமைப்பு 12க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று எண்ணிய இஸ்ரேல், இன்று காலை லெபானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் மீது தாக்குதல் நடத்தியது. எல்லையிலிருந்து 35 கிமீ தொலைவில் உள்ள அபு அல் அஸ்வாத் என்ற கடலோர பகுதியில்தான், பல ட்ரோன்களை ஏவி வான் தாக்குதலை நடத்தியிருக்கிறது இஸ்ரேல்.

இதையும் படியுங்கள்:
வயது வரம்பில் தளர்வு: மருத்துவக் காப்பீட்டு விதிகளில் புதிய மாற்றம்!
Isreal Vs Hezbollah

இந்தத் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் வான் பாதுகாப்பு படையைச் சேர்ந்த இன்ஜினியர் உட்பட இரண்டு பேர் இறந்துள்ளனர். தங்கள் தரப்பிலிருந்து  இருவர் இறந்துள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பு கூறியுள்ளது. இதுவரை நடந்த இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போரில் 378 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். அதில் பலரும் ஹிஸ்புல்லா அமைப்பினரைச் சேர்ந்தவர்கள். இதில் பொதுமக்கள் 70 பேரும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com