சென்னை ஆழ்வார்பேட்டை சீத்தம்மாள் காலனியில் உள்ள நியாய விலைக் கடையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பொங்கல் தொகுப்பு மற்றும் பரிசுத்தொகையை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
கடந்த மூன்று நாட்களாக பொங்கல் தொகுப்பு மற்றும் தொகை வழங்குவதற்கான டோக்கன் வழங்கப்பட்டு வந்த நிலையில், அந்தத் திட்டம் இன்று முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்டுள்ளது. தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகைக்காக பொங்கல் தொகுப்பு மற்றும் தொகை வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அந்த அறிவிப்பின்படி இத்திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தற்போது தொடங்கி வைத்திருக்கிறார்.
இதில் குறிப்பாக பொங்கல் பரிசு தொகப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்புடன் சேர்த்து ரொக்க தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு அதற்கான பரிசுத்தொகுப்பை தற்போது முதலமைச்சர் முக ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கக்கூடிய சீத்தம்மாள் காலனி நியாய விலைக் கடையில் குடும்ப அட்டை வைத்திருக்கக் கூடிய பயனாளிகளுக்கு தற்போது அந்த பரிசு தொகுப்பினை வழங்கிக் கொண்டிருக்கிறார்.
குறிப்பாக இந்த பொங்கல் பரிசு தொகையைப் பொறுத்தவரை குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வாழக்கூடிய குடும்பத்தாருக்கும் இது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் இன்றிலிருந்து வழங்கப்படுவதற்கான திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இந்தத் திட்டத்தின் படி பார்க்கும்போது மொத்தமாக 2 கோடியே 19 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பயன்பெறும்.
மேலும் இதற்காக 2436 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பரிசுத் தொகை வழங்குவதற்கு டோக்கன்கள் கடந்த மூன்று நாட்களாக விநியோகிக்கப்பட்டு, சரியான முறையில் பொங்கலுக்கு முன்பாகவே அனைவருக்கும் பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகையான 1000 ரூபாயை வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளனர்.