பிரதமர் மோடி - முதலமைச்சர் விஜய் சந்திப்பு! 10 நிமிட சந்திப்பில் விவாதிக்கப்பட்டது என்ன?

pm modi - vijay
pm modi - vijay
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on: 

தமிழக முதலமைச்சர் விஜய் 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். சென்னையில் இருந்து காலை 10 மணி அளவில் தனி விமானம் மூலம் முதலமைச்சர் விஜய் டெல்லி சென்றார்.

மாலை 4.30 மணி முதல் 5 மணி வரை பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் வைத்து முதலமைச்சர் விஜய் சந்திக்க உள்ளார் என தகவல் வெளியானது.

இந்நிலையில் சற்றுமுன் தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழ்நாடு முதல்வர் விஜய் சந்திப்பு மேற்கொண்டார். புதியதாக கட்டப்பட்டுள்ள சேவா தீர்த் அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்தார் முதல்வர் விஜய். சுமார் 10 நிமிடம் நீடித்த சந்திப்பில், மேகதாது அணை, நிதி ஒதுக்கீடு உள்பட தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகளை முதல்வர் விஜய் பிரதமரிடம் முன்வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்து, மேகதாது அணை, போர்விமான வடிவமைப்பு மையம், இலங்கை சிறையில் உள்ள தமிழர்கள் படகுகள் மீட்பு - பிரதமரிடம் 4 கோரிக்கைகளை வலியுறுத்தினர் முதல்வர் விஜய்

மேலும் இந்தச் சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் தற்போது பிரதமர் அலுவலக எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

logo
Kalki Online
kalkionline.com