சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

சிறைத்துறை கட்டடங்களை திறந்துவைத்த முதல்வர்
சிறைத்துறை கட்டடங்களை திறந்துவைத்த முதல்வர்
Published on

மிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (19.7.2024) தலைமைச் செயலகத்தில், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையின் சார்பில் 9 கோடியே 45 இலட்சத்து  25 ஆயிரம் ரூபாய் செலவில் திண்டிவனத்தில் கட்டப்பட்டுள்ள கிளைச் சிறைக் கட்டடம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட சிறைச்சாலையில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையானது, நீதிமன்றங்கள் குற்றவாளிகளுக்கு வழங்கும் தண்டனைகளை நிறைவேற்றுவது மட்டுமின்றி, அவர்களை நல்வழிப்படுத்தி அவர்களின் எதிர்க்கால வாழ்க்கைக்குத் தேவையான கல்வி மற்றும் தொழில் திறன்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் வழங்குகிறது. சிறைகள் மற்றும் சிறைவாசிகளின் பாதுகாப்பினை மேம்படுத்துதல், சிறைவாசிகளின் நலன் மற்றும் சிறைவாசிகளை பொறுப்புள்ள நபர்களாக மாற்றி சமுதாயத்தில் மீண்டும் இணைத்தல் ஆகிய மூன்றும் இத்துறையின் முக்கிய நோக்கங்களாகும்.

சிறைப் பணியாளர்கள் மற்றும் சிறைவாசிகளுக்கு உகந்த சூழ்நிலையை உருவாக்குவதற்கான உட்கட்டமைப்பினை மேம்படுத்துவதற்காகவும், நவீனமயமாக்குவதற்காகவும் இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழ்நாடு சிறைவாசிகளின் அங்கீகரிக்கப்பட்ட இடவசதி 24,342 ஆகும். தற்போது 23,500 சிறைவாசிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறைகளில் இடநெருக்கடியைக் குறைக்க அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

புழல், மத்திய சிறை 2ல் கூடுதலாக 1000 சிறைவாசிகளை அனுமதிக்கும் வகையில் கூடுதல் தளம் கட்டவும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 500 சிறைவாசிகளை அனுமதிக்கும் வகையில் புதிய மாவட்ட சிறைக் கட்டடம் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்:
இன்றைய தேதி 19 அல்ல… ஜூலை 30! எல்லாரும் நம்மள ஏமாத்துறாங்க ப்ரோ!
சிறைத்துறை கட்டடங்களை திறந்துவைத்த முதல்வர்

அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் 8 கோடியே 39 இலட்சத்து 22 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கிளைச்சிறை கட்டடம் மற்றும் செங்கல்பட்டில் உள்ள மாவட்ட சிறைச்சாலையில் 1 கோடியே 6 இலட்சத்து 3 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடம், என மொத்தம் 9 கோடியே 45 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டலின் இன்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அ.கா.விஸ்வநாதன், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநர் மகேஷ்வர் தயாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com