இன்றைய தேதி 19 அல்ல… ஜூலை 30! எல்லாரும் நம்மள ஏமாத்துறாங்க ப்ரோ!

Calender
Calender
Published on

அனைவருக்குமே தெரியும் இன்றைய தேதி 19 என்று. ஆனால், இந்த தேதி முழுவதுமாக தவறு என்று சொன்னால் நம்பமுடிகிறதா? ஆதாரம் இருந்தால் நம்பித்தானே ஆக வேண்டும்.

காலங்கள் தவறாக மாறுவதில்லை. ஆனால், நம்முடைய கணக்கு சில சமயம் தவறாக மாறலாம் அல்லவா? நம் உலகில் கணித மேதாவிகள் இருந்தாலும், கணக்கில் தவறு விழுவது சகஜம்தான். வாருங்கள் என்ன தவறு? ஏன் தவறானது என்று பார்ப்போம்.

பல வருடங்களுக்கு முன்னர், அதாவது 1752ம் ஆண்டிற்கு முன்னர் வரை உலக மக்கள் அனைவருமே ஜூலியஸ் காலண்டரைதான் பயன்படுத்தினார்கள். அந்த ஜூலியஸ் காலண்டரில் 1752ம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் சுமார் 11 நிமிடங்கள் கணக்கு தவறாக இருந்து வந்திருக்கிறது. பின்னர் 1752ம் ஆண்டுக்கு பிறகுதான் புதிதான ஆங்கில காலண்டர் அறிமுகமானது.

அப்போது அறிவுப்பூர்வமாக ஆண்டாண்டு காலமாக இருந்து வந்த அந்த 11 நிமிடங்கள் தவற்றை சரி செய்து அறிமுகப்படுத்தினார்கள். ஆக, 1752ம் ஆண்டு காலண்டரில் செப்டம்பர் மாதம் 2ம் தேதிக்குப் பிறகு 14ம் தேதி இருக்கும். அதாவது இடையில் இருந்த அத்தனை நாட்களும் இடம்பெறவில்லை. இதனை நீங்கள் இப்போது கூகுல் சென்று அந்த ஆண்டு காலண்டரில் பார்த்தாலும் அந்த நாட்கள் இல்லாததைப் பார்க்கலாம். இதுதான் அதற்கான ஆதாரம்.

இதையும் படியுங்கள்:
கடைசி உலகப் போர்... மிரட்டலான லுக்கில் ஹிப்ஹாப் ஆதி!
Calender

சற்று நினைத்துப் பாருங்களேன், இப்போது திடீரென்று ஒரு 1 நாளில் 10 நாட்கள் கடந்துவிட்டது என்றால், எப்படி இருக்கும்? அதேபோல்தான் அந்த ஆண்டு அந்த மக்களுக்கும் இருந்தது. ஒரு 11 நிமிட தவற்றை சரி செய்ய போய், புதிய தவறு உருவானது. ஆனால், இதுவரை 11 நிமிட தவற்றை அவர்கள் எவ்வாறு கண்டுபிடித்தார்கள் என்று தெரியவில்லை.

இப்போது நீங்கள் கொண்டாடும் உங்கள் பிறந்தநாள், திருமண நாள் எதுவுமே சரியான நாளில் கொண்டாடப்படுவதில்லை, அனைத்தையும் 11 நாட்கள் கழித்துக் கொண்டாடுகிறீர்கள் என்று சொன்னால், அதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறதா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com