தேவர் குருபூஜை: முதல்வர் ஸ்டாலின் நாளை மதுரை பயணம்!

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115-வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்திற்கு செல்லவிருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. 

இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மதுரை செல்லவுள்ளார்.

பின்னர் ஞாயிற்றுக்கிழமை காலையில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

மேலும், அங்குள்ள மருதுபாண்டியர் சிலைக்கும் மரியாதை செலுத்துகிறார் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது..

logo
Kalki Online
kalkionline.com