

சென்னை நந்தனத்தில் உள்ள வழிகாட்டி நிறுவனத்தில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில், முன்னணி பொறியியல் நிறுவனமான எல் அண்ட் டி (L&T) நிறுவனம் புதிய மின்னணு உற்பத்தி ஆலை அமைக்க ₹5000 கோடி முதலீட்டு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் சுமார் 5000 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.முதலமைச்சர் விஜய் முன்னிலையில் முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில், முன்னணி பொறியியல் நிறுவனமான எல் அண்ட் டி (Larsen and Toubro - L&T) மற்றும் தமிழக அரசுக்கு இடையே ரூபாய் 5000 கோடி முதலீட்டிற்கான முக்கியப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த முதலீட்டின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 5000 இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கோயம்புத்தூரில் 40 ஏக்கர் பரப்பளவில் மின்சார வாகனங்கள் மற்றும் ஆட்டோமொபைல் எலக்ட்ரானிக்ஸ் உதிரிபாகங்கள் தயாரிப்புக்காக அதிநவீன உற்பத்தி வளாகம் அமைக்கப்பட உள்ளது. கோவையில் அமையவுள்ள எல் & டி நிறுவனத்தின் இந்த எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மின்சார வாகன உற்பத்தி ஆலை, தமிழகத்தை தெற்காசியாவின் முக்கிய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஈவி (EV) உற்பத்தி மையமாக மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த தனிநபர் காப்பீட்டு நிறுவனமான 'சப்' (Chubb) மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த காற்றாலை உற்பத்தி நிறுவனமான 'நார்டெக்ஸ்' (Nordex) ஆகிய நிறுவனங்கள், தமிழ்நாட்டில் முதன்முறையாகத் தங்களது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களை (R&D Centers) அமைப்பதற்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன.
ஆஸ்திரேலியாவின் முன்னணி ஆராய்ச்சி சார்ந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான 'மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம்' (University of Western Australia), தனது புதிய வளாகத்தைச் சென்னை வேளச்சேரியில் அமைக்க உள்ளது. தமிழ்நாட்டில் அமையவுள்ள முதல் சர்வதேசப் பல்கலைக்கழக வளாகம் இதுவாகும். சுமார் 50,000 சதுர அடி பரப்பளவில், ₹125 கோடி முதலீட்டில் இந்த அதிநவீன வளாகம் உருவாக்கப்பட உள்ளது.
அதேபோல் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா கடந்த ஜூனில் தென்கொரியாவிற்கு மேற்கொண்ட பயணத்தின் தொடர்ச்சியாக அந்த நாட்டின் முன்னணி வாகன உதிரிபாக உற்பத்தி நிறுவனமான மோட்டிவ்லிங்க், காஞ்சிபுரம் சிப்காட் தொழில் பூங்காவில் 300 கோடி ரூபாய் முதலீட்டில் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது. இந்த புதிய முதலீடுகள் மற்றும் திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டில் 2,920-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியின் போது உறுதியளித்த முதலமைச்சர் விஜய், "இந்த முதலீடுகள் உயர்கல்வி மற்றும் மேம்பட்ட உற்பத்தி துறைகளுக்கான உலகளாவிய மையமாக தமிழ்நாட்டை நிலைநிறுத்துவதில் முக்கிய பங்காற்றும். முதலீடு செய்யும் நிறுவனங்களின் செயல்பாடுகள் தமிழ்நாட்டில் வெற்றி பெற தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் அரசு முழுமையாக வழங்கும்" எனத் தெரிவித்தார்.