கிண்டி மாளிகைக்கு விரைந்த தலைமை செயலாளர், டி.ஜி.பி! விஜய்யின் பதவியேற்பு எப்போது?

tn governor
tn governor
Updated on

தமிழகத்தில் புதிய அரசு அமைப்பது தொடர்பான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தமிழக ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகரை தமிழக அரசின் முக்கிய உயர் அதிகாரிகள் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை எந்த கட்சியும் தனித்து பெறாத நிலையில், 108 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியதைத் தொடர்ந்து, ஆளுநர் பெரும்பான்மை ஆதரவுக்கான கடிதத்தை கேட்டு உள்ளார். இதைத் தொடர்ந்து ஆட்சி மாற்றத்திற்கான நிர்வாக நடவடிக்கைகள் குறித்தும், பதவி ஏற்பு விழா தொடர்பாகவும், பதவி ஏற்புக்குப் பிறகு சட்ட பிரச்சினைகள் ஏதேனும் நேருமா என்பது குறித்தும் இந்த உயர் அதிகாரிகள் ஆளுநருடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த சந்திப்பு இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிண்டி மக்கள் மாளிகையில் தமிழக தலைமைச் செயலாளர் சாய்குமார், டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் உயர் அதிகாரிகள் பிற்பகல் 3.30 மணிக்கு ஆளுநரை சந்திக்க உள்ளனர்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எந்த நேரத்திலும் ஆளுநரை சந்திக்கக் கூடும் என தகவல் வெளியான நிலையில் தமிழக ஆளுநரை இன்று மாலை 4 மணிக்கு ஈபிஎஸ் சந்திக்கும் திட்டமில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்:
#BREAKING : ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை தவெகவிடம் இல்லை - தமிழ்நாடு ஆளுநர் மாளிகை அறிக்கை..!
tn governor
logo
Kalki Online
kalkionline.com