மக்களே உஷார்..! வேகமெடுக்கும் சிக்கன்குனியா.! பொதுமக்கள் செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும்.!

Chikungunya Do's & Dont's
Chikungunya
Published on

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சிக்கன்குனியா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சிக்கன்குனியா பரவல், வேகம் எடுத்துள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் தங்களது வீட்டில் என்னவெல்லாம் செய்ய வேண்டும், செய்யக்கூடாது என மருத்துவர்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தெரிவித்துள்ளனர்.

சிக்கன்குனியாவில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும் பொது சுகாதாரத்துறை நேற்று உத்தரவு பிறப்பித்தது.

இதுதவிர முன்கூட்டிய பரிசோதனைகள், டெங்கு, சிக்கன்குனியா பாதிப்புக்கு தனித்தனி வார்டுகள் அமைப்பது மற்றும் நடமாடும் மருத்துவக் குழு அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெங்கு மற்றும் சிக்கன்குனியா ஆகிய இரண்டு நோய் பாதிப்புகளும் ஏடிஸ் வகை கொசுக்களின் மூலமே பரவுகிறது. ஆகையால் பொதுமக்கள் தங்களது வீட்டுக்குள்ளேயும், வீட்டிற்கு வெளியேயும் சிறிதளவு தண்ணீர் கூட தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சளி, இருமல், உடல் வலி, தொண்டை வலி மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் எந்த வைரஸ் பரவி வருகிறது மற்றும் அது உருமாற்றம் அடைந்துள்ளதா என்பதை கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளது பொது சுகாதாரத் துறை.

சிக்குன்குனியா அறிகுறிகள்:

முதல் அறிகுறிகளாக அதிகபடியான காய்ச்சல், கடுமையான மூட்டு வலி, எலும்புகள் வலி, தோல் அலர்ஜி உண்டாகும்.

இந்நிலையில் பொதுமக்கள் தங்கள் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிகளை வாரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்து கொசுக்கள் நெருங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
தவெக தனித்து போட்டியா.! விஜய்யின் மாஸ்டர் பிளான் இது தான்..!!
Chikungunya Do's & Dont's

சிக்கன்குனியா பரவல் குறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், “சிக்கன்குனியா மற்றும் டெங்கு ஆகிய இரண்டு நோய் பாதிப்புகளும் ஏடிஸ் வகை கொசுக்களினால் பரவுகிறது. ஆகையால் எங்கெல்லாம் டெங்கு பாதிப்புகள் ஏற்படுகிறதோ அங்கெல்லாம் சிக்கன் குனியா ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகமுள்ளன.

இருப்பினும் பொதுமக்களுக்கு ஏற்படும் நோய் பாதிப்பு டெங்குவா அல்லது சிக்கன்குனியாவா என்பதை கண்டறிய வேண்டும். டெங்கு காய்ச்சல் இல்லை என்பது உறுதியான பிறகே, வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் டெங்கு காய்ச்சல் இருக்கும் போது வலி நிவாரணிகளை எடுத்துக் கொண்டால், அது ரத்தக் கசிவுத் தன்மையை ஏற்படுத்தி விடும்.

ஏடிஸ் வகையான கொசுக்கள் நன்னீரில் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் தன்மை உடையவை. இந்த கொசுக்கள் பகலிலும் கடிக்கும் தன்மை கொண்டதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். தீவிர காய்ச்சல் மற்றும் அதிக மூட்டு வலி இருந்தால், பொதுமக்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்” என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
மக்கள் தொகை கணக்கெடுப்பு.! உங்களுக்காக காத்திருக்கும் 33 கேள்விகள் என்னென்ன தெரியுமா.!
Chikungunya Do's & Dont's

பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள்:

* சோர்வடையாமல் இருக்க நீராகாரம் எடுத்துக் கொள்ள வேண்டும். 24 மணி நேரமும் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

* கொசு வலைகள் பயன்படுத்தி, உடல் முழுவதும் மூடுவது போன்ற ஆடைகளை அணிந்துக் கொள்ள வேண்டும்.

செய்யக் கூடாதவை:

* வீட்டை சுற்றி கொசுக்கள் உற்பத்தியாகாமல் இருக்க நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும். வீட்டில் உள்ள பாத்திரங்களிலும் நீரை மாற்றி வைக்க வேண்டும்.

* கொசுக்கடியில் இருந்து தப்பிக்க மருந்துகள் உடலில் தேய்ப்பவர்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு தேக்க வேண்டாம். 10% டிஇஇடி இருக்கும் மருந்துகளை மட்டும் பயன்படுத்தவும்.

* கொசுக்கடி மருந்துகளை உள்ளங்கை, கண், வாய் பகுதியில் போட வேண்டாம். கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், பச்சிளம் குழந்தைகள் மருந்தின் வீரியத்தை பொறுத்து பயன்படுத்த வேண்டும்.

* இருண்ட நிறங்களை தான் கொசுக்கள் தேடும். ஆகையால் இருள் நிற ஆடைகளை தவிர்க்கவும். மேலும், இறுக்கமான ஆடைகளை அணிவதையும் தவிர்க்கவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com