மக்கள் தொகை கணக்கெடுப்பு.! உங்களுக்காக காத்திருக்கும் 33 கேள்விகள் என்னென்ன தெரியுமா.!

Census
Census
Published on

பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, கடைசியாக 2011 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன் பிறகு 2021-ல் நடக்க வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதற்கட்டப் பணிகளுடன் தொடங்க உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்ட பணியான வீடுகளைப் பட்டியலிடுதல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பில் பொதுமக்களிடம் கேட்கப்பட வேண்டிய 33 கேள்விகள் அடங்கிய அரசாணையை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.

இந்தியாவில் கடந்த 1872 ஆம் ஆண்டு முதல் முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இருப்பினும் 1881 இல் தான் முழுமையான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பிறகு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வரும் நிலையில், 2027 ஏப்ரல் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை முதற்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போதும் இரண்டு கட்டங்களாக நடைபெறுது வழக்கம். முதல் கட்டத்தில் வீடுகளை கணக்கிடும் பணியும், இரண்டாவது கட்டத்தில் தனி நபர்களின் விவரங்களும் சேகரிக்கப்படும். அவ்வகையில் தற்போது வீடுகளை பட்டியலிடுவதற்கான முதற்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் பொதுமக்களிடம் 33 வகையான கேள்விகள் கேட்கப்பட உள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வகையான வீடு, வீட்டின் சுவர், கூரை மற்றும் தரையைக் கட்ட என்னென்ன பொருட்கள் பயன்படுத்தப்பட்டன, வீட்டின் உரிமை நிலை என்ன, வீட்டில் எத்தனை குடும்பங்கள் வசிக்கின்றன, வீட்டில் உட்கொள்ளும் உணவு தானியங்கள் எவை, குடிநீருக்கான ஆதாரம் என்ன, எல்பிஜி, தொலைக்காட்சி, மொபைல்போன், கணினி, இணைய வசதி மற்றும் கழிப்பறை வசதி உள்ளதா? உள்ளிட்ட 33 வகையான கேள்விகள் பொதுமக்களிடம் கேட்கப்பட உள்ளன. முதற்கட்டப் பணிகள் வருகின்ற 2027 ஏப்ரல் 1 முதல் செப்டம்பர 3 0 வரை நடைபெற உள்ளது.

உள்ளூர் பகுதிகளின் எல்லைக்குள் இருக்கும் வீட்டுப் பட்டியல் மற்றும் வீடு எண்ணிக்கை அட்டவணைகளின் மூலம், பொதுமக்களிடம் கேள்விகளைக் கேட்டு தரவுகளை சேகரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
ஃப்ளோசிங் செய்வது ரொம்ப முக்கியம்! ஏன் தெரியுமா?
Census

பொதுமக்களின் விவரங்கள், வீடுகளை கணககிடுதல், கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற தகவல்களைச் சேகரித்து, நாட்டில் கொள்கைகளை வகுக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு உதவுகிறது. 2027-ல் நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி வாரியான கணக்கெடுப்பும் அடங்கும்.

மேலும் டிஜிட்டல் முறைகள் மற்றும் மொபைல் செயலிகள் மூலமாக இந்த கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. பொதுமக்களே தங்கள் விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்யும் வசதியும் இந்த முறை கொண்டு வரப்பட உள்ளது.

இதையும் படியுங்கள்:
கண்கள் அடிக்கடி அரிக்கிறதா? உங்களுக்கான 8 டிப்ஸ் இதோ!
Census

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com