பேத்தியை வளர்த்ததுக்கு 45 லட்சம் ஃபீஸ் கேட்ட பாட்டி! சீனாவில் நடந்த விசித்திர வழக்கு..!

15 ஆண்டுகள் பராமரிப்பு செலவைக் கேட்ட 60 வயது மூதாட்டி; நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன?
சீன வழக்கு
சீன வழக்குSource:nakkheeran
சேலம் சுபா

சேலம் சுபா எனும் பெயரில் பல வருடங்களாக முன்னணி பத்திரிக்கைகள் நாளிதழ்களில் கட்டுரைகள் , கதைகள், நேர்காணல்கள் எழுதி வருகிறேன்.15 வயதில் துவங்கிய எழுத்து பயணத்தில் தற்போது பாரம்பரியம் மிக்க கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக உங்களிடம் எனது படைப்புகள் இணைவதில் பெரு மகிழ்ச்சி. வாழ்வியல், தன்னம்பிக்கை, ஆன்மீகக் கட்டுரைகளில் ஆர்வம். "உறவுச்சங்கிலி" எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. எழுத்து என்பது வரம். அது படிப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் அமையவேண்டும் என்பதை கருத்தில் வைத்து எழுதுகிறேன். நிச்சயம் நீங்களும் விரும்புவீர்கள். ஆதரவு அளிக்கும் கல்கிக்கு நன்றி. தொடர்ந்து பயணிப்போம்.

Updated on

சீனாவில் “பேத்தியை 15 ஆண்டுகள் வளர்த்ததற்காக மகனிடம் ரூ.45 லட்சம்” கேட்டதாக வெளியாகியிருக்கும் செய்தி தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

சீனாவின் ஷாங்காய் நகரின் சாங்ஜியாங் மாவட்டத்தைச் சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்ட சூ (Xu) என்ற பெண் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார். அவரது மகன் லியாங் (Liang) 2014-ல் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார். அப்போது அவரது மகளுக்கு 4 வயது.

விவாகரத்துக்குப் பிறகு பேத்தியின் தினசரி பராமரிப்பை பெரும்பாலும் சூ ஏற்றுக்கொண்டார்.பின்னர் மகன் மறுமணம் செய்து புதிய மனைவியுடன் தனியாகச் சென்றுவிட்டார். பேத்தி தொடர்ந்து பாட்டியின் பராமரிப்பிலேயே இருந்தார்.சுமார் 15 ஆண்டுகள், உணவு, உடை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல செலவுகளை சூ ஏற்றதாக செய்திகளில் கூறப்படுகிறது.

நான்கு வயதிலிருந்து தனது பேத்தியை வளர்த்ததற்கு ஊதியமாக மகனிடம் ரூபாய் 45 லட்சம் கேட்டு சூ என்ற மூதாட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். சூ (Xu) கேட்ட தொகை சுமார் 3.6 லட்சம் சீன யுவான் என்றும் நீதிமன்ற சமரசத்துக்குப் பிறகு மகன் 2 லட்சம் யுவான் செலுத்த ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

சூ வழக்குத் தொடர்ந்ததன் பின்னணியில் இருந்த வாதம், குழந்தையின் தந்தையான தனது மகன்தான் அடிப்படையில் பராமரிப்புப் பொறுப்பை ஏற்க வேண்டும்; ஆனால் அந்தப் பொறுப்பு பெரும்பாலும் தன் மீது விழுந்தது என்பதேயாகும்.

மேலும், வயது முதிர்ந்த நிலையில் தொடர்ந்து பேத்தியைப் பராமரிப்பதால் ஏற்பட்ட பொருளாதாரச் சுமையை இனியும் தனியாக ஏற்க முடியவில்லை என்றும் அவர் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது நியாயமான வாதமாகவே இருந்தாலும் மகன் லியாங் தனது தாயின் குற்றச்சாட்டை முழுமையாக ஏற்கவில்லை. அவர்

அப்போது தனது மாத வருமானம் சுமார் 3,000 யுவான் மட்டுமே என்றும், தனது பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு மகளைப் பராமரிக்க முயன்றதாகவும் அவர் தெரிவித்தார்.

இறுதியில் நீதிமன்ற சமரசம் பேரில் சூ கேட்ட தொகையில் பாதி அளவு தருவதாக ஒப்புக்கொண்டார் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக பேரன் பேத்திகளை தாத்தா பாட்டிகள் வளர்ப்பது உலக நடைமுறைதான். இருப்பினும் இந்த விசித்திரமான வழக்கு ஏன் சீனாவில் பெரிய விவாதமாகியுள்ளது என்பதற்கு காரணம் உள்ளது.

சீனாவில் தாத்தா-பாட்டிகள் பேரக்குழந்தைகளை வளர்ப்பது பல குடும்பங்களில் வழக்கமாக உள்ளது. இதை அங்கு மாலைநேரக் குழந்தைப் பராமரிப்பு (twilight childcare)என்று குறிப்பிடுகின்றனர்.இருபவளர்ப்பிற்கான வளர்ப்பிற்கான செலவுகளை கேட்ட பாட்டி சூ வின் இந்த வழக்கு பேரக்குழந்தைகளை வளர்ப்பது தாத்தா-பாட்டியின் குடும்பக் கடமையா? அல்லது அவர்கள் செலவழிக்கும் பணம், நேரம், உழைப்பு ஆகியவை சட்டரீதியாக மதிக்கப்பட வேண்டிய பராமரிப்புப் பணியா?” போன்ற முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இதுபோன்ற வழக்குகள் சீனாவில் ஏற்கெனவே இருந்துள்ளதாகத் தெரிகிறது. உதாரணமாக, மற்றொரு வழக்கில் தாத்தா-பாட்டி பேரக்குழந்தைகளுக்காகச் செய்த அவசியமான செலவுகளை பெற்றோரிடம் திரும்பப் பெற நீதிமன்றம் அனுமதித்துள்ளது என்றங தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விஷயத்தில் நமது நாட்டில் என்ன நிலை ? குறிப்பாக, “பேத்தியை வளர்த்தேன்; எனவே மகன் எனக்கு கட்டாயம் பணம் கொடுக்க வேண்டும்” என்ற நேரடி உரிமை இந்தியச் சட்டத்தில் பொதுவாக இல்லை எனப்படுகிறது.

சீனாவில் பெற்றோருக்கு குழந்தையைப் பராமரிக்கும் முதன்மைப் பொறுப்பு உள்ளது. ஆனால் சில சூழ்நிலைகளில் தாத்தா–பாட்டி பேரக்குழந்தையை வளர்ப்பது தொடர்பான செலவுகளை பெற்றோரிடம் கோருவதற்கான சட்ட வாய்ப்பு இருக்கிறது.

குறிப்பாக, பெற்றோர் தங்களுடைய குழந்தையைப் பராமரிக்க முடியாத சூழ்நிலையில், தாத்தா–பாட்டி உண்மையில் பராமரிப்பை மேற்கொண்டிருந்தால், செலவுகள் தொடர்பாக நீதிமன்றத்தை அணுகும் வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் “15 ஆண்டுகள் நான் குழந்தையை வளர்த்தேன்; அதற்கான சம்பளத்தை நிர்ணயித்து கொடுக்க வேண்டும்” என்ற தானாக அமையும் உரிமை என்று இதைப் புரிந்துகொள்ளக்கூடாது. வழக்கின் உண்மைகள், பெற்றோரின் பொறுப்பு, தாத்தா–பாட்டி செய்த செலவுகள் போன்றவை நீதிமன்றத்தால் பரிசீலிக்கப்படும்.

அதே சமயம் இந்தியாவில் நிலை சற்று வித்தியாசமானது..இங்கு பெற்றோர்தான் குழந்தையைப் பராமரிக்க வேண்டியவர்கள்

பொதுவாக, சிறுவனின்/சிறுமியின் உணவு, கல்வி, மருத்துவம், பராமரிப்பு போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய சட்டப் பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது.

தாத்தா–பாட்டி தங்களாக முன்வந்து பாசத்துடன் குழந்தையை வளர்த்துவிட்டார்கள் என்பதற்காக மட்டும், அந்தச் செலவுகளை “சம்பளம்” போல பெற்றோரிடம் வசூலிக்க தனியான பொதுச் சட்ட உரிமை இல்லை.

ஆனால் தாத்தா–பாட்டிக்கு முக்கியமான சட்ட உரிமை இருக்கும் என்று சொல்லப்படுகிறது. சில சமயங்களில்

பெற்றோர் குழந்தையை கவனிக்காமல் இருந்தால், தாத்தா–பாட்டி நீதிமன்றத்தை அணுகும்போது குழந்தையின் நலன் எங்கே சிறப்பாக பாதுகாக்கப்படும்? என்று விசாரித்து பின் குழந்தையை தாத்தா பாட்டி பொறுப்பில் விடலாம்.

இந்திய நீதிமன்றங்கள் குழந்தையின் பாதுகாவல்/பாதுகாவலர் உரிமை (custody/guardianship) விவகாரங்களில் பெற்றோரின் சட்ட உரிமையை மட்டும் பார்க்காமல், குழந்தையின் நலனையே முதன்மையாக பார்க்கின்றன. உதாரணமாக, ஒரு குழந்தையை சிறுவயது முதல் பாட்டி அன்புடன் வளர்த்து வந்திருந்தால், குழந்தையுடன் ஏற்பட்ட உணர்வுப்பூர்வமான பிணைப்பு உள்ளிட்ட காரணங்களையும் நீதிமன்றம் கருத்தில் கொள்கிறது.

இதனால் சட்டங்கள் வழியே இந்த விஷயத்தில் சீனாவின் நிலை வேறு. நமது நாட்டின் நிலை வேறு. நமது தாத்தா பாட்டிகள் இதுவரை இது போன்ற வழக்குகளைத் தொடரவில்லை என்பது நமது ஆறுதல்.

இதையும் படியுங்கள்:
தாத்தா-பாட்டி கதைகள் குழந்தைகளை எப்படி அறிவாளியாக மாற்றுகின்றன?
சீன வழக்கு
logo
Kalki Online
kalkionline.com