உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்த சீனாவில் கடந்து சில ஆண்டுகளாக பிறப்பு பிறப்பு விகிதம் கடுமையாக சரிந்து வருகிறது. குழந்தை பிறப்பை அதிகரிக்க அந்நாட்டு அரசு புதிய உத்தியை கையில் எடுத்துள்ளது.
நம் அண்டை நாடான சீனா ஒரு காலத்தில் மக்கள் தொகையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தது ஆனால் சமீப காலமாக வாழ்க்கை முறை மாற்றம் பொருளாதார சுமை போன்றவற்றால் அந்நாட்டின் மக்கள் தொகை சரிவை நோக்கி செல்கிறது. அந்நாட்டின் தற்போதைய மக்கள் தொகை 141 கோடி
சீனாவில் முன்பு ஒரு குழந்தை கொள்கை அமலில் இருந்தது அதை தளர்த்திய பிறகு இளம் தம்பதியினர் குழந்தை பெற தயக்கம் காட்டி வருகின்றனர் இதனால் மக்கள் தொகை சரிவு ஏற்பட்டு பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.மேலும் மக்கள் தொகை குறைவால் வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து தொழிலாளர் பற்றாக்குறையும் ஏற்படும் அபாயம் உள்ளது இதனால் குழந்தை பெற்ற தம்பதியருக்கு வரி தள்ளுபடி, குழந்தை வளர்ப்பு மானியம், பிரசவச் செலவு இலவசம் உள்ளிட்ட சலுகைகளை சீனா அறிவித்துள்ளது
இந்த நிலையில் மற்றொரு நடவடிக்கையாக கருத்தடை மாத்திரை ஆணுறை இவற்றுக்கு 13 சதவீதம் வரி விதித்து உள்ளது. இந்த புதிய வரி விதிப்பு புத்தாண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் மக்கள் தொகை பெருகும் என்பது சீனாவின் நம்பிக்கை.