

புதுவருட பிறப்பு என்பது ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான புத்துணர்ச்சியை அளிக்கும். புதிய வருடம் நமக்கு எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள அனைவருக்குமே ஆர்வமாக இருக்கும். அவ்வகையில் ஜோதிடத்தில் சிறந்தவர்களும், கணிப்புகளை முன்னரே வெளியிடும் தீர்க்கதரிசிகளும் 2026 ஆம் ஆண்டு குறித்து பல்வேறு கணிப்புகளை வெளியிட்டுள்ளனர். அவ்வகையில் பல்கேரியாவை சேர்ந்த தீர்க்கதரிசி பாபா வாங்கா பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை கணித்துள்ளார்.
பாபா வாங்கா கணிப்புகள் பல நேரங்களில் மெய்யானதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் 2026 ஆம் ஆண்டில் பல்வேறு எதிர்மறையான விஷயங்கள் நடக்கும் என பாபா வாங்கா கணித்துள்ளதாக கூறப்படுகிறது. இது உலகளவில் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தாலும், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 1911 ஆம் ஆண்டு பல்கேரியாவில் பிறந்தவர் தீர்க்கதரிசி பாபா வாங்கா. சிறுவயதிலேயே தனது கண் பார்வையை இழந்த இவர், உள்ளுணர்வின் மூலம் உலகில் அடுத்து என்னென்ன நடக்கப் போகிறது என்பதை கணித்து கூறி வருகிறார். அவ்வகையில் 2026 புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், இந்த வருடத்தில் என்னவெல்லம் நடக்கப் போகிறது என்பதைக் கணித்துக் கூறியுள்ளார் பாபா வாங்கா.
கடந்த 20 ஆண்டுகளில் உலக அளவில் பல்வேறு அரசியல் மாற்றங்கள், ஆட்சி மாற்றங்கள், போர்கள், பொருளாதார வீழ்ச்சிகள் மற்றும் கொரோனா வைரஸ் பரவல் என பல்வேறு நிகழ்வுகள் நிகழ்ந்து விட்டன. ஆனால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்ய அதிபராக புதின் மட்டும் தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறார்.
2026 ஆம் ஆண்டில் ரஷ்ய அதிபர் புதினின் வீழ்ச்சி தொடங்கும் என பாபா வாங்கா கணித்துள்ளார். ரஷ்யாவில் ஒரு புதிய தலைவரின் எழுச்சி தொடங்க உள்ளதாகவும், ரஜினியின் ஆட்சி காலம் முடிவுக்கு வர உள்ளதாகவும் அவர் கணித்துள்ளார். மேலும் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான மோதல், புதிய உச்சத்தை அடையும் எனவும் கணித்துள்ளார்.
உலக நாடுகளுக்கிடையில் போர் நடக்க அதிக வாய்ப்புள்ளதாகவும், இந்தப் போர் 3வது உலகப்போராக இருக்கும் எனவும, தைவானை சீனா கைப்பற்றும் என்றும் பாபா வாங்கா கணித்துள்ளார்.
கடந்த ஆண்டில் செயற்கை தொழில்நுட்பம் எனும் ஏஐ வளர்ச்சியை நோக்கி பயணிக்கத் தொடங்கிய நிலையில், இந்த ஆண்டில் இதன் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும். அதோடு ஏஐ மீது மனிதர்கள் அதிக கவனம் செலுத்தத் தொடங்குவர்.
2026-ல் நிதி சார்ந்த சிக்கல்கள் உலக பொருளாதாரத்தை ஆட்டிப் படைக்கும் என்பதால், நாணயங்கள் வீழ்ச்சி அடைவதோடு, பங்குச்சந்தையும் சரியத் தொடங்கும். இதனால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இந்த வருடமும் புதிய உச்சத்தை அடையும் என பாபா வாங்காவின் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
வருகின்ற நவம்பர் மாதத்தில் பூமியை நோக்கி ஒரு விண்கலம் வரவுள்ளதால், வேற்று கிரகவாசிகளுடன் மனிதர்கள் தொடர்பு கொள்ள வாய்ப்புண்டு. மேலும் இந்த வருடத்தில் ஏற்பட உள்ள இயற்கை சீற்றங்களால் பூமியின் 8% பகுதி பாதிப்படையும் எனவும் பாபா வாங்காவின் கணிப்புகள் கூறுகின்றன.