சீன ராணுவத்தின் அடுத்த மூவ்..! எல்லை பாதுகாப்பில் ரோபோக்களை நிறுத்த முடிவு..!

robots
robotssource: business today
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

சீன ராணுவம் வியட்நாம் எல்லையில் ரோந்துப் பணிக்காக 500 ரோபோக்களை நிறுத்த திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே ரோபோ நாய்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள நிலையில், இது ரோபோ வீரர்களை பயன்படுத்துவதற்கான அடுத்த கட்டமாக கருதப்படுகிறது. மேலும் நெரிசலான இடங்களில் மக்களை வழிநடத்தவும் இந்த ரோபோக்கள் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் யுபிடெக் ரோபோடிக்ஸ் நிறுவனத்திற்கும் சீன ராணுவத்திற்கும் இடையே அண்மையில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி சீனாவின் ஷென்செனை தளமாகக் கொண்ட நிறுவனமான UBTech Robotics, வியட்நாம் எல்லைக்கு அருகில் உள்ள ஒரு சோதனை நிலையத்தில் அதன் Walker மனித உருவ மாதிரிகளைப் பயன்படுத்துவதற்கு 37 மில்லியன் ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது. அதன்படி அந்த நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் மனித வடிவிலான 500 ரோபோக்களை சீன ராணுவத்தில் ஒப்படைக்க உள்ளது.

இவற்றை வியட்நாம் எல்லைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுத்த சீன ராணுவம் திட்டமிட்டுள்ளது. படிப்படியாக சீன எல்லைப் பகுதிகள் முழுவதும் இந்த ரோபோ வீரர்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இதையும் படியுங்கள்:
வாடிக்கையாளர்களே நோட் பண்ணிக்கோங்க... SBI வங்கியில் டிசம்பர் 1 முதல் இந்த சேவை கிடையாது...!!
robots

அமெரிக்க ராணுவத்திற்கு இணையாக சீன ராணுவத்தின் பலம் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. சீன ராணுவத்தில் ஏற்கனவே ரோபோ நாய்கள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்டமாக ரோபோ வீரர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

இந்த ரோபோக்கள் தாங்களாகவே பேட்டரிகளை மாற்றும் திறனைக் கொண்டுள்ளன. இவை டிசம்பரில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இவை பயணிகளை வழிநடத்தவும், வரிசைகளை நிர்வகிக்கவும், தளவாடங்களை ஆதரிக்கவும், கூட்டத்தை கட்டுப்படுத்தவும் சீனா வியட்நாம் எல்லை தளத்தில் UBTechயின் Walker மனித உருவ ரோபோக்களை சோதிக்க உள்ளது. இந்த புதிய Walker மனித உருவ ரோபோக்கள், அவற்றின் சொந்த பேட்டரிகளை தன்னியக்கமாக மாற்ற முடியும். இதனால் ரீசார்ஜ் செய்யாமல் நீண்ட நேரம் செயல்படவும் முடியும்.

வால்கர் எஸ் 2 என்று பெயரில் 1.76 மீட்டர் உயரத்தில் ரோபோக்கள் இருக்கும் என்றும், இதன் ஒரு கரத்தில் 15 கிலோ வரையிலான பொருட்களை தூக்கிச் செல்ல முடியும் என்றும், இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் செயல்படும் என்றும் கூறப்படுகிறது. அத்துடன் உலகத்திலேயே முதல் முறையாக இதில் இரண்டு பேட்டரிகள் இருக்கும் என்றும், ஒரு பேட்டரியில் சார்ஜ் குறைந்தால் மற்றொரு பேட்டரி மூலம் ரோபோக்கள் தொடர்ந்து செயல்படும் என்றும் கூறப்படுகிறது. சார்ஜ் குறைந்த பேட்டரியை ரோபோக்கள் தானாகவே அகற்றி சார்ஜ் செய்து கொள்ளும். இதனால் 24 மணி நேரமும் வால்கர் எஸ் 2 ரோபோவால் செயல்பட முடியும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
உடனே செக் பண்ணுங்க..! வங்கி கணக்கில் 1 ரூபாய் வந்துடுச்சா? அப்போ உங்களுக்கு 1000 ரூபாய் கன்பார்ம்..!
robots
logo
Kalki Online
kalkionline.com