சீனா, ஜப்பான், தென் கொரியா - உருவாகும் மூவர் கூட்டணி?

சீனா, ஜப்பான், தென் கொரியா - உருவாகும் மூவர் கூட்டணி?

சீனாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவருமான வாங் யி, சீனா, ஜப்பான், தென் கொரியா என முத்தரப்பும் இணைந்து செயல்படுவது குறித்து ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் பேச்சு நடத்த இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

கடந்தவாரம் கென்யாவில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட வாங் யி, பொருளாதார விஷயங்களில் ஜப்பான் தந்து வரும் ஒத்துழைப்பை பாராட்டி பேசியிருக்கிறார். பின்னர் இந்தோனேஷியாவில் நடந்த ஓரு கூட்டத்தில் ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சரான யோஷிமசா ஹாயாச்சியுடனும் வாங் யி சந்திப்பு நடந்தது. அப்போதும் இது குறித்து பேசப்பட்டிருக்கிறது.

மூன்று நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும்  கூடி பேசுவதற்கு ஆர்வத்துடன் இருப்பதால் இவ்வாண்டு இறுதிக்குள் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பிருப்பதாக சீன பத்திரிக்கைகளும் செய்தி வெளியிட்டிருககின்றன.  அமெரிக்காவுடன் நெருக்கமான நட்புறவில் உள்ள ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் சீனாவின் மீது அதிருப்தியோடு இருக்கின்றன.

சீனாவின் போர்ப் பயிற்சிகளும், தைவான் உள்ளிட்ட விஷயங்களில் அமெரிக்காவுடன் சீனா மேற்கொண்டு வரும் மோதல் போக்குகளும் ஜப்பான், தென் கொரியா நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தியிருப்பதாகவும் அது குறித்துதான் பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாகவும் ஜப்பான் வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

இதுவென்றும் புதிதல்ல கடந்த 2019 இறுதியில் மூன்று நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் ஏற்கனவே ஒன்று கூடி பேசியிருக்கிறார்கள். ஆனால், கொரானா தொற்று பரவல், உக்ரைன் போர், அமெரிக்காவில் பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட மாறுபட்ட சூழல் நிலவும்போது  கிழக்காசியாவின் மூன்று பவர்புல் நாடுகளும் ஒன்று கூடி பேசுவதை அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com