திருச்சியில் சோழர் காலத்துக் கல்வெட்டுகள் கண்டுப்பிடிப்பு!

திருச்சி
திருச்சி

மகா சிவராத்திரிக்காக நேற்று கிராமத்தை சுத்தம் செய்வதற்காக இறங்கிய கிராம மக்கள், 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்துக் கல்வெட்டுகளைக் கண்டுப்பிடித்துள்ளனர்.

திருச்சிக்கு அருகில் உள்ள திருவெறும்பூர் அருகே கும்பக்குடி கிராமத்தில்தான் இந்தக் கல்வெட்டுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. தமிழில் புரியும் அளவிலேயே இருந்ததால் அதில் சோழ அரசர் விக்ரமச்சோழன் பெயர் இருந்ததுத் தெரியவந்தது. மேலும் அரசரின் பெயருடன் அன்பிலூருடையார், திருவென்காடுடையார் ஆகிய பெயர்களும் இருந்தன. மக்கள் சிவராத்திரிக்காகக் கிராமத்தைச் சுத்தம் செய்யும்போது சிவலிங்கமும் கோவில் இருந்ததற்கான ஆதாரங்களும் கண்டுப்பிடிக்கப்பட்டன.

அங்கிருந்த மக்களில் ஒருவர் பேசியபோது ஆற்றுப்படை அறக்கட்டளை அந்த இடத்தை ஆய்வு செய்து வருவதாக கூறினார். மேலும் அந்த இடத்தை வேலிப் போட்டுத் தடை செய்து வைத்திருக்கின்றனர்.

நேற்று மூன்று கல்வெட்டுகளைக் கண்டுப்பிடித்துள்ளனர். அதில் ஒன்று மட்டுமே எளிதாகப் படிப்பது போல இருந்தது. மற்ற இரண்டுக் கல்வெட்டுகளைப் படிக்க முடியவில்லை என்று கிராம மக்கள் கூறினார்கள். அந்தக் கல்வெட்டுகளையும் சில உடைந்த கட்டடங்களுடைய பாகங்களின் வடிவமைப்புகளைப் பார்க்கும்போது 10ம் நூற்றாண்டில் கட்டப்பட்டக் கோவிலாக இருக்கும் என்றுக் கணிக்கின்றனர்.

மேலும் அந்தக் கல்வெட்டுகள் 12ம் நூற்றாண்டிற்கு முன் செய்யப்பட்டவையாக இருக்கும் என்று கூறுகிறார்கள். விக்ரமச்சோழன் காலத்தில் இருந்த அந்த கல்வெட்டுகளில் சோழ வளநாட்டிற்குட்பட்டது என்று இருந்தது. மேலும் காவேரி ஆற்றின் தென்பகுதி கரையில் அமைந்திருக்கும் கோவில் என்றுக் குறிப்பிட்டிருந்தது.

இதையும் படியுங்கள்:
ஒருபோதும் தலை வணங்க மாட்டேன்.. ரஷ்ய அதிபருக்கு எதிராக ஜோ பைடன் சபதம்!
திருச்சி

அப்போதும் அந்தக் கிராமம் கும்பக்குடி என்றுத்தான் இருந்தது. பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் எந்தப் பெயர் மாற்றமும் இல்லை. கோவிலின் பெயர் தெரியவில்லை என்றாலும் அன்பிலூருடையார் மற்றும் திருவென்காடுடையார் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இருவருமே லால்குடி மற்றும் சீர்காழி இடத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே கோவில் முழுவதுமாக சேதமடைந்துவிட்டது. ஆனால் 2.5 அடி உயரம் கொண்ட சிவலிங்கம் மட்டும் அப்படியே உள்ளது.

இதனையடுத்து தொல்லியல் துறை அதிகாரிகள் வந்து ஆய்வு நடத்தவுள்ளனர். மேலும் இங்குச் சில கல்வெட்டுகள் புதைந்து இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கின்றனர். அதில் கோவிலைப் பற்றிய இன்னும் சிலத் தகவல்கள் இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com