ஒருபோதும் தலை வணங்க மாட்டேன்.. ரஷ்ய அதிபருக்கு எதிராக ஜோ பைடன் சபதம்!

Joe Biden
Joe Biden

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜோ பைடனின் பதவி காலம் முடியப்போவதால், தேர்தலுக்கான பிரச்சாரங்களில் தீவிரமாக இறங்கியுள்ளார். ஏற்கனவே ட்ரம்பை கடுமையாகத் தாக்கி பேசிய ஜோ பைடன், இப்போது ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராகப் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இப்போது நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் அதிபர் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இவரை எதிர்த்து ஜனநாயக் கட்சி சார்பில் ஜோ பைடன் அதிபர் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டு அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன்தான் வேட்பாளர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. 

இந்நிலையில் சமீபத்தில் ஸ்டேட் ஆஃப் யூனியனில் ஜோ பைடன் உரையாற்றியபோது, டோனால்ட் டிரம்ப் பற்றி கடுமையாகப் பேசி, ரஷ்ய அதிபருக்கு நான் ஒருபோதும் தலை வணங்க மாட்டேன் என சபதமிட்டார். “அமெரிக்கா இப்போது தாக்குதலுக்கு உட்பட்டுள்ளது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அமெரிக்கா பல பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. குடியரசுக் கட்சியின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதினுக்கு பயந்து அடிபணிந்து இருப்பார். ஆனால் நான் அவருக்கு ஒருபோதும் தலைவணங்க மாட்டேன்” என ஜோ பைடன் பேசியது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படியுங்கள்:
தனுஷ், நாகார்ஜுனா இணையும் புதிய படத்தின் அப்டேட் இன்று மாலை வெளியீடு!
Joe Biden

மேலும் காசா கடற்கரையில் அமெரிக்க ராணுவம் தற்காலிக துறைமுகத்தை நிறுவி, அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com