குடியுரிமை திருத்தச் சட்டம்: போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள எதிர்க்கட்சிகள்!

CAA Protest
CAA Protest
Published on

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அசாம் மாநிலத்தில் கடுமையானப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து இன்றும் அசாமின் எதிர்க்கட்சிகளும் பல மாணவ அமைப்புகளும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

 நான்கு வருடங்களாக எந்த விதிகளும் வகுக்கப்படாமலும் அமல்படுத்தாமலுமிருந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை பா.ஜ.க அரசு தற்போது நடைமுறைக்குக் கொண்டுவந்திருக்கிறது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.

முன்னதாக, 2019ம் ஆண்டு பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததும் அதே ஆண்டில் டிசம்பரில் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதாவைச் சட்டமாக நிறைவேற்றியது. இந்தச் சட்டத்தின் மூலம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வந்த இந்து, பௌத்தம், சமணம், பார்சி, கிறித்தவம் மற்றும் சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்தக் குடியுரிமை வழங்கப்பட்டது.

அதாவது இந்த நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வந்த இந்த மதங்களைச் சார்ந்தவர்கள் ஒரு ஐந்து ஆண்டுகள் மட்டும் வசித்திருந்தால் கூட அவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும். ஆனால் இந்த இடத்தில்தான் பிரச்சனை வெடித்தது. இந்து, பௌத்தம், சமணம், பார்சி, கிறித்துவம் ஆகிய மதங்களில் இஸ்லாம் மதத்தை அவர்கள் எங்குமே குறிப்பிடவில்லை. இதனையடுத்து பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, இந்தியா முழுவதும் பல போராட்டங்கள் வெடித்திருக்கின்றன.

இதையும் படியுங்கள்:
மெட்ரோவில் அறிமுகமாகவுள்ள புதிய அம்சங்கள்.. பயணிகள் இனி கவலையே இல்லாமல் பயணம் செய்யலாம்!
CAA Protest

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக அசாம் மாநிலத்திலும் கடுமையானப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாநிலத்தின் பல பகுதிகளில் மாணவர்கள் சட்ட நகலை எரித்துப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதேபோல் 16 எதிர்க்கட்சிகள் இணைந்து மாநிலம் முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளன. அதேபோல் இன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் டார்ச் லைட் பேரணி மற்றும் சத்தியாகிரகம் நடத்தப் போவதாக அசாம் மாணவ அமைப்புகள் அறிவித்துள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com