ஐ.டி.ஐ படிப்புக்கு மூடுவிழா? ஆர்வம் காட்டாத மாணவர்கள்!

ஐ.டி.ஐ படிப்புக்கு மூடுவிழா? ஆர்வம் காட்டாத மாணவர்கள்!

பத்தாம் வகுப்பு பாஸ், பெயில் மாணவரா? ஐ.டி.ஐ சேரலாம் வாங்க என்னும் பிட் நோட்டீஸை 90களில் நிறைய பார்த்திருக்கிறோம். இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை ஐ.டி.ஐ படிப்புக்கு நல்ல வரவேற்பு இருந்தது. படித்து முடித்தால் ஏராளமான வேலை வாய்ப்புகளும் கிடைத்தன. சுயதொழில் செய்யவும் முடிந்தது.

ஏ.சி மெக்கானிக், கார் மெக்கானிக், பிளம்பர், எலெக்ட்டீரிஷியன் போன்ற பணிகளுக்கு பத்தாம் வகுப்பு படித்தால் போதும். ஒராண்டு அல்லது ஆறு மாதம் ஐ.டி.ஐ நிறுவனத்தில் கற்றுக்கொண்டால் சுயமாக பணி செய்ய ஆரம்பித்துவிடலாம். பிளம்பர், எலெக்ட்டீரிஷியன் பதவிகள் பன்னாட்டு நிறுவனங்கள் முதல் உள்நாட்டு நிறுவனங்கள் அனைத்திலும் உண்டு. அதில் சேர்ந்து பணியாற்றவும் முடியும்.

2015 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் எடுக்கப்பட்ட ஆய்வுகளின் படி, ஆண்டுதோறும் ஐ.டி.ஐ படிக்க முன்வருவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருக்கிறது. ஐ.டி.ஐ படிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களிலும் ஐ.டி.ஐ படிப்புக்கு வரவேற்பு குறைந்து வருவதாக குறிப்பிடுகிறார்கள்.

ஐ.டி.ஐ படிப்பை விட ஐ.டி படிப்பு சம்பந்தப்பட்ட பயிற்சிகளில் சேர்ந்து சான்றிதழ் பெற்றாலே பன்னாட்டு ஐ.டி நிறுவனங்களில் பணியில் சேர முடியும்போது எதற்காக ஐ.டி.ஐ படித்து குறைவான சம்பளத்திற்கு பணி செய்ய வேண்டும் என்கிற எண்ணம் மாணவர்களிடையே இருந்து வருகிறது.

ஐ.டி.ஐ பயிற்சி நிறுவனங்களும் முன்பைப் போல் மாணவர் சேர்க்கையிலும், சரியான ஆசிரியர்களை நியமிப்பதிலும் கவனம் செலுத்துவதில்லை. பல ஐ.டி.ஐ நிறுவனங்கள், பெட்டிக்கடை போல் சுருங்கிவிட்டன. முதலில் பயிற்சி தரும் ஆசிரியர்களுக்கு லேட்டஸ்ட் தொழில்நுட்பம் குறித்த புரிதல் வேண்டும்.

பல ஐ.டி.ஐ நிறுவனங்கள் காலத்திற்கேற்ப படிப்புகளை அப்கிரேட் செய்ய தவறிவிட்டன. ஏ.சி மெக்கானிக் படிப்புக்கான சிலபஸ் இன்னும் அப்டேட் செய்யப்படவில்லை. நவீன தொழில்நுட்பத்தின் படி தயாராகியுள்ள ஏ.சி வகைகள், ரெப்ரிஜிரேட்டர் போன்றவற்றை மாணவர்களால் கையாள முடியாத சூழல் இருக்கிறது.

இந்தியாவில் எந்தவொரு ஐ.டி.ஐ நிறுவனத்தின் சேர்க்கை நிலவரங்களை பார்த்தால் ஆர்வமின்மை வெளிப்படையாக தருகிறது. காலியிடங்களில் பாதியை கூட நிரப்ப முடியாத நிலைதான் நீடிக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன்னர் வரை, ஒவ்வாரு ஆண்டு 4 லட்சம் மாணவர்கள் ஐ.டி.ஐ படிப்புகளில் ஆர்வம் காட்டினார்கள். தற்போது அதில் பாதி கூட இல்லை

மாணவர்களின் செயல்திறனை ஊக்கப்படுத்தும் ஸ்கில் டெவலப்மெண்ட் பயிற்சிக்காக மத்திய அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து வருகிறது. இந்தியா முழுவதும் 426 ஐ.ஐ.டி நிறுவனங்களை தேர்ந்தெடுத்து 2200 கோடி ரூபாய் செலவில் புதிய பயிற்சிகளை தந்து வருகிறது. ஆனாலும், மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த முடியவில்லை.

சென்னை போன்ற பெருநகரங்களில் உடைந்து போன குழாய்களை சரி செய்யவும், மின் விளக்குகளை சரியாக எரிய வைக்கவும், ஏ.சி வேலை செய்வதை நிறுத்தினால் அதை பழுது பார்க்கவும் ஆட்கள் கிடைப்பது சிரமமமாகி வருகிறது. வீட்டுக்கு வீடு வந்து சரி பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் 200 ரூபாய் மின் விளக்கை சரி செய்ய 100 ரூபாய் சர்வீஸ் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com