#JUST IN : கோயில் பூசாரிகளுக்கு 11 மெகா அறிவிப்புகள் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு..!

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

சென்னை மயிலாப்பூரில் கிராமக் கோயில் பூசாரிகள் மாநாடு சிறப்பாக நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறையின் ஏற்பாட்டில் நடந்த இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்துகொண்டு, கிராமப்புற திருக்கோயில்களில் பணிபுரியும் பூசாரிகளின் நலனை மேம்படுத்தும் வகையில் புதிய திட்டங்களை அறிவித்து தொடங்கி வைத்தார். கிராமக் கோயில் பூசாரிகளுக்கு 11 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட  அமைச்சர்களும், ஆதீன பெருமக்களும், சென்னை மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் எனப் பலரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டினுடைய முக்கிய நோக்கம் அரசு நிர்வாகக் கட்டுப்பாட்டில் இல்லாத கிராம கோவில்களில் பணிபுரியும் பூசாரிகளுக்கு நிதி மற்றும் சமூக பாதுகாப்பு அளிப்பதுடன் கோவிலின் நிர்வாகத்தை வலுப்படுத்துவதும் பாரம்பரியத்தை பாதுகாப்பதுமாகும்.

சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற "கிராம பூசாரிகள் மாநாட்டில்" முதலமைச்சர் மு க ஸ்டாலின் பூசாரிகளின் நலனுக்காக புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

  • பொங்கல் தினத்தை முன்னிட்டு கிராம பூசாரிகளுக்கு புத்தாடை வழங்கப்படும்.

  • பூசாரிகளின் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் திருமண உதவித்தொகை மேலும் ரூபாய் 1000 உயர்த்தப்படும்.

  • ஆண்டுதோறும் 500 பூசாரிகளுக்கு பயிற்சி வழங்கப்படும்.

  • பூசாரிகளின் மகன் மற்றும் மகளுக்கு வழங்கப்படும் திருமண உதவித்தொகை மேலும் ரூபாய் 1000 உயர்த்தப்படும்.

  • உறுப்பினராக உள்ள பூசாரிகள் உயிரிழந்தால் அவரின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் தொகை ரூபாய் 50,000லிருந்து 1 லட்சம் ஆக உயர்த்தப்படும்.

  • பூசாரிகளின் பிள்ளைகளின் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புக்கு ஆண்டுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூபாய் 2000 ஆக உயர்த்தி வழங்கப்படும். 

  • பூசாரிகளின் பிள்ளைகளுக்கு தொழில் சார்ந்த பட்டப் படிப்பு உதவித்தொகை 2000 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும்.

  • பூசாரிகளின் பிள்ளைகளுக்கு தொழில் பயிற்சி நிலையத்தில் பயில ஆண்டுக்கு ரூபாய் 1000 உயர்த்தி வழங்கப்படும்.

  • இயற்கை எய்தும் உறுப்பினராக உள்ள கிராம பூசாரிகளின் ஈமச்சடங்கிற்கான தொகை 10,000 ஆக உயர்த்தப்படும்.

  • கிராம கோயில் பூசாரிகளுக்கான ஆண்டு வருமான உச்சவரம்பு ரூபாய் 75,000லிருந்து ரூபாய் 1, 25,000ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன விவசாயி.! துருப்பிடித்த டிராக்டர் செய்த மேஜிக்.!
முதல்வர் ஸ்டாலின்
logo
Kalki Online
kalkionline.com