#JUST IN : ஒவ்வொரு குடும்பமும் தெருவில் இறங்கி போராடும் - இது தமிழகத்தின் இறுதி எச்சரிக்கை - மத்திய அரசுக்கு ஸ்டாலினின் எச்சரிக்கை..!

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
Published on

"மாண்புமிகு பிரதமர் அவர்களே இது தமிழ்நாட்டின் இறுதி எச்சரிக்கை" என முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எக்ஸ் தளத்தில் காணொளி மூலம் பதிவிட்டு நாடாளுமன்ற கூட்டத்தொடர் பற்றிய தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் வாசல் வரை வந்துவிட்ட பேராபத்து பற்றி மக்கள் அறியவும் மற்றும் ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கையாகவும் இந்த காணொளி பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வரும் 16 ஆம் தேதி முதல் 18 வரை நடைபெறுகிறது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தற்போது தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் எதிர்ப்பு காணொளி பரபரப்பைத் தரும் விதத்தில் மத்திய அரசுக்கு எச்சரிக்கை தருகிறது.

காணொளியில் ஸ்டாலின்:

தேர்தலுக்கு நடுவே கூட்டத்தொடர் வலுக்கட்டாயமாக கூட்டப்படுகிறது . ஸ்டாலின் சொன்னதை செய்ததற்காகவே எங்களுக்கு தண்டனையா! பிரதமருக்கு தமிழ்நாட்டில் இறுதி எச்சரிக்கை என முதலில் பதிவு செய்துள்ளார்.

மேலும் அளவாக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு கூறியதை நான் கேட்டோம் சொன்னதை ஒழுங்காக செய்வதற்காகவே எங்களுக்கு தண்டனை தருவீர்களா?

எத்தகைய சட்ட திருத்தம் என்ற விளக்கம் இல்லை திமுகவின் கவனம் தேர்தலில் மட்டும் தான் இருக்கும் என எண்ணிவிடாதீர்கள். தொகுதி மறு வரையறை தொடர்பாக நாம் சொன்ன எதையும் மத்திய அரசு காதில் வாங்கிக் கொள்ளவில்லை .

மிரட்டல் என நினைத்தாலும் பரவாயில்லை எந்த கட்சியுடனும் எந்த மாநிலத்துடனும் ஆலோசனை நடத்தாமல் அவர்கள் இஷ்டத்துக்கு செய்கின்றனர். பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட யாருக்கும் முறையாக பதில் அளிக்கவில்லை.

தென் மாநில மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர் மாநில உரிமைகள் படுகொலை எனவும்  மிரட்டல் என நினைத்தாலும் பரவாயில்லை,  1950 60 காலத்தில் திமுகவை பார்ப்பீர்கள் என முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை  விடுத்துள்ளார்.

மேலும் எத்தகைய சட்ட திருத்தம் என்ற விளக்கம் ஒன்றிய அரசிடமிருந்து இதுவரை இல்லை .எப்படி செய்யப் போகிறார்கள் என்ன சட்ட திருத்தம் என்பது குறித்து எந்த விளக்கமும் இல்லை.

ஒவ்வொரு குடும்பமும் தெருவில் வந்து உட்காருவோம். தமிழ்நாடு தனது எதிர்ப்பை கடுமையாக காட்டும். ஒவ்வொரு குடும்பமும் தெருவில் வந்து உட்காருவோம் .

தமிழ்நாட்டை பாதிக்கும் வகை சட்ட திருத்தம் இருந்தால் சும்மா இருக்க மாட்டோம். இது தேர்தல் காலம் என்பதால் எங்கள் கவனம் அதில் மட்டும் இருக்கும் என எண்ண வேண்டாம்.

தொகுதி மறு வரையறை செய்ய நினைக்காதீர்கள். என் தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் .
பழைய திமுகவை பார்க்க வேண்டி இருக்கும்.

இது மிரட்டல் நினைத்தாலும் பரவாயில்லை எச்சரிக்கை ..இது அம்பேத்கர் மீது ஆணை இவன் என்ன மிரட்டுகிறான் என நினைக்காதீர்கள்..

இப்படி நீண்ட காணொளியில் ஸ்டாலின் விடுத்த எச்சரிக்கை அரசியல் வட்டாரத்தில் சூடு கிளப்பியுள்ளது.

இதையும் படியுங்கள்:
#BREAKING : தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10,000 ரூபாய் வழங்கப்படும் - பாஜகவின் தேர்தல் அறிக்கை!
முதல்வர் மு.க.ஸ்டாலின்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com