#JUST IN : "நான் கலைஞரின் மகன்.. சொன்னதைச் செய்வேன்!" - திருச்சியில் கர்ஜித்த மு.க. ஸ்டாலின்..!

 முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
Published on

ஏப்ரல் 23-ல் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தல் பரப்புரை பிரச்சாரங்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சூடு பிடித்து வரும் நிலையில் இன்று திருச்சியில் முதல்வர் மு க ஸ்டாலின் திமுக கட்சியின் சார்பாக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

திருச்சி தென்னூரில் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திரண்டிருக்கும் மக்கள் கூட்டத்தில் மு க ஸ்டாலின் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், மணப்பாறை , துறையூர் , முசிறி உள்பட 9 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி திருச்சியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார்.

கூட்டத்தில் முதலமைச்சரின் மு க ஸ்டாலின் 2021 திருச்சியில் மாவட்டம் திருச்சி மாவட்ட ஒன்பது தொகுதிகளையும் திமுக கூட்டணி வென்றது போல் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி மீண்டும் மீண்டும் வரவேண்டும் என்றும் குறிப்பாக நான் திருச்சிக்கு மீண்டும் மீண்டும் வருவதை போல தமிழ்நாட்டில் திமுக ஆட்சி மீண்டும் வரவேண்டும் என அன்பு கட்டளை இட்டார்.

கே என் நேரு ,அன்பில் பொய்யாமொழி உள்ளிட்டவர்களின் சிறப்புகளை மக்களிடையே எடுத்துக் கூறி அவர்களை அறிமுகப்படுத்திய பின்னர் திருச்சியில் அரசு செய்த திட்டங்களை எடுத்துக் கூறினார்.

"திருச்சிக்காக பல்வேறு முத்திரை திட்டங்களை திமுக செயல் படுத்தி உள்ளது .திருச்சியில் இரண்டு மாதிரி பள்ளிகளை கட்டியுள்ளோம் .சூரியூரில் மினி ஸ்டேடியம் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டுள்ளது. ஏர்போர்ட் மிஞ்சும் வகையில் உள்ள பஞ்சபூர்ப பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி பகுதிக்கு 9 கூட்டு குடிநீர் திட்டங்களுடன் மேலும் இரண்டு அமைச்சர்களை கொடுத்த மண் திருச்சி சிறப்பான 2 அமைச்சர்களை தந்த மண் திருச்சி மாவட்டம். திருச்சி என்றாலே பிரமாண்டம் திருச்சிக்காக பல்வேறு முத்திரை திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். திமுக ஆட்சி மீண்டும் மீண்டும் வரவேண்டும் இன்னும் ஆயிரக்கணக்கான திட்டப் பணிகளை செயல்படுத்துவோம். தலைநகர் சென்னைக்கு சவால் விடும் வகையில் திருச்சி இன்று உயர்ந்து கொண்டுள்ளது "

காமராஜர் பெயரில் அமையும் நூலகம் திறந்து வைக்கப்படும் போன்ற உறுதி மொழிகளுடன் ஆட்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையிலே தேர்தல் அறிவிப்புகள் இருக்கும் என கூறினார்.ஐந்து ஆண்டுகளில் கடந்த தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாத திட்டங்கள் பல நிறைவேறுகிறது என்றும் மேலும் தற்போதைய தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் ஏற்கனவே அரசு செயல்படுத்தி வரும் 9 லட்சம் மாணவ மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 போன்ற உள்ளிட்ட திட்டங்களை பட்டியலிட்டு உரையை நிகழ்த்தினார் மு.க.ஸ்டாலின்.

மணப்பாறை திருச்சி கிழக்கில் வெயிட்டான வேட்பாளரை நிறுத்தியுள்ளோம் .திருச்சியில் 100% நமக்கு வெற்றி தான் என்று கூடியிருந்த தொண்டர்களை உற்சாகப்படுத்தியதுடன் உங்கள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கேட்கிறேன் என வாக்குகளை சேகரித்தார்.

"நாங்கள் சொன்னால் செய்வோம் செய்வதைத்தான் சொல்வோம் ஏனெனில் நான் கலைஞரின் மகன் சொன்ன வாக்குறுதிகளை மறக்கவும் மாட்டேன் மறுக்கவும் மாட்டேன்" என்று கூறி கரகோஷம் பெற்றார் ஸ்டாலின்.

இதையும் படியுங்கள்:
2026 சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் ஸ்டார் வேட்பாளர்கள்..!
 முதல்வர் மு.க.ஸ்டாலின்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com