

2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஸ்டார் வேட்பாளர்கள் யார் யார்? என்பதையும் அவர்களும் போட்டியிடும் தொகுதிகளையும் எவை என்பதை பற்றியும் ஒரு சிறு கண்ணோட்டம்.
1.விஜய்
இந்த தேர்தலில் அதிகம் கவனிக்கப்படுவது , தமிழ் சினிமாவின் இளையத் தளபதி என்று அழைக்கப்படும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை தான். விஜய் செல்லும் இடமெல்லாம் பெரும் கூட்டம் கூடி போக்குவரத்து நெரிசல் , இட நெருக்கடி போன்றவை நடைபெறுவதால் , தற்போது விஜய் வீடியோ மூலம் பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல். இவர் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
2. சீமான்
திரையில் இருந்து அரசியலுக்கு வந்த ஒரு சிலரின் சீமானும் ஒருவர். திரையில் சீமான் புகழை பெறவிட்டாலும், அரசியலில் எப்போதும் பரபரப்பான ஒரு பேச்சாளராக இருக்கிறார். சீமானின் பேச்சுகளுக்கு எப்போதும் தனி ரசிகர் வட்டம் இருக்கிறது. இந்த முறை சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார்.
3. மு.க.ஸ்டாலின்
முன்னாள் முதல்வர் கலைஞர். கருணாநிதியின் மகன் என்று முறையில் முன்பே அரசியலில் ஸ்டாலின் பிரதிநிதித்துவம் பெற்றுவிட்டார். தற்போது தமிழக முதல்வராக இருக்கும் அவர் தொகுதி ஸ்டார் அந்தஸ்தை பெற்றுள்ளது. இந்த முறையும் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலேயே போட்டியிடுகிறார்.
4.எடப்பாடி பழனிச்சாமி
தமிழகத்தின் எதிர்கட்சித் தலைவராகவும் முன்னாள் முதல்வராகவும் இருந்த எடப்பாடி பழனிச்சாமி , வழக்கம் போல தனது எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். இதே தொகுதியில் வெற்றி தோல்வி இரண்டையும் சந்தித்த பழனிச்சாமி எப்போதும் தனது எடப்பாடி தொகுதியை விட்டு, வேறு தொகுதிக்கு மாறியது இல்லை.
5. ஓ.பன்னீர்செல்வம்
மூன்று முறை தமிழகத்தின் முதல்வராக இருந்த பெருமை கொண்டவர் ஓ. பன்னீர்செல்வம். தற்போது அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு சட்டமன்றத் தேர்தலை சந்திக்கிறார்.இந்த முறையும் அவர் போடி தொகுதியில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறார்.
6.சுந்தர். சி
புகழ்பெற்ற இயக்குனரும் நடிகருமான சுந்தர். சி , இந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள புதிய நீதி கட்சியின் சார்பாக போட்டியிடுகிறார். முதல்முறையாக களம் இறங்கும் இவர் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடுகிறார்.
7.உதயநிதி ஸ்டாலின்
அரசியலுக்கு வரும் முன்பே திரைத்துறையில் தயாரிப்பாளராக களம் இறங்கியவர் உதயநிதி ஸ்டாலின். பின்னர் 'ஓகே ஓகே' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர். தமிழகத்தின் துணை முதல்வரான அவர் , கடந்த சட்டமன்ற தேர்தலைப் போலவே இந்த முறையும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
8. கருணாஸ்
நகைச்சுவை நடிகரான கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை என்ற கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். இதற்கு முன்னர் திருவாடானை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் , இந்த முறை சிவகங்கை தொகுதியில் போட்டியிடுகிறார்.
9.மன்சூர் அலிகான்
தமிழ் சினிமாவின் வில்லன் நடிகராகவும் நகைச்சுவை நடிகராகவும் பிரபலமானவர் மன்சூர் அலிகான். தனது கட்சியின் சார்பில் இவர் லால்குடி தொகுதியில் போட்டியிடுகிறார்.
10. சௌமியா அன்புமணி
சௌமியா அன்புமணி பாமக தலைவர் அன்புமணியின் மனைவியும் , முன்னாள் காங்கிரஸ் கட்சி தமிழக தலைவர் எம். கிருஷ்ணசாமியின் மகளும் ஆவார். பாமகவின் பெண் முகமாக இவர் கருதப்படும் இவர் தர்மபுரி தொகுதியில் போட்டியிடுக்கிறார்.
11. திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரான திருமாவளவன் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சிதம்பரம் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரான அவர் , இந்த சட்டமன்றத் தேர்தலில் காட்டுமன்னார்குடி தொகுதியில் வேட்பாளராக களம் இறங்குகிறார்.
12 .ஶ்ரீநாத்
தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராகவும் , ஒரு சில திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும் நடித்தவர் ஸ்ரீநாத். இவர் நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பர் , தவெக கட்சி சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார்.
13. அண்ணாமலை
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலை கர்நாடகாவில் புகழ்பெற்ற காவல்துறை அதிகாரியாக இருந்தவர். இந்த முறை இவர் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுகிறார்.
14. நயினார் நாகேந்திரன்
தமிழக பாஜகவின் தலைவரான நயினார் நாகேந்திரன் இந்த சட்டமன்றத் தேர்தலில் தனது தொகுதியை விட்டு , சாத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
15. தமிழிசை சவுந்தர்ராஜன்
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும் , காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி ஆனந்தனின் மகளாகிய தமிழிசை சௌந்தர்ராஜன் தமிழக அரசியலில் மிகவும் பிரபலமானவர். இரண்டு மாநிலங்களில் ஆளுநராக பணியாற்றிய அவர் இந்த முறை மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் களமிறங்கியுள்ளார்.