தமிழகத்தில் புதிதாக 196 துணை மின் நிலையங்கள் - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு..!

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அதிரடி அறிவிப்பு: ரூ.33,066 கோடியில் பிரம்மாண்ட மின் திட்டங்கள்!
cm vijay
cm vijay source:twitter
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

தமிழ்நாடு சட்டமன்றபேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று முக்கிய மின் கட்டமைப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 196 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும். 15 ஆயிரம் கிலோமீட்டர் நீளமுடைய புதிய மின் பாதைகள் அமைக்கப்படும் என்றும், ஏற்கனவே உள்ள மின் பாதைகள் வலுப்படுத்தப்படும் என்றும் அறிவிப்பு வந்துள்ளது. மாநிலத்தின் மின் விநியோகத்தை மேம்படுத்தவும், தடையற்ற மின்சாரத்தை உறுதி செய்யவும் ரூபாய் 33,066 கோடி மதிப்பில் மின் தொடரமைப்பு மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முழுவதும் புதிதாக 196 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் தொழில்துறை மற்றும் மின் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் தூத்துக்குடியில் புதிய சூப்பர்கிரிட்டிகல் வெப்பமின் நிலையம் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

அதன்படி 800 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு அலகுகளுடன், புதிய தெர்மல் பவர் ஸ்டேஷன்கள் அமைக்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பையும் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேரவையில் முன் வைத்துள்ளார்.

மொத்தமாக 1,600 மெகாவாட் திறன் கொண்ட New Supercritical Thermal Power Station 20 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும் என்றும் அறிவித்துள்ளார். இதன் மூலம் மாநிலத்தின் மின் உற்பத்தித் திறன் பெருமளவில் அதிகரிக்கும் என்றும், வருங்கால மின்சார தேவைகளை எளிதில் சமாளிக்க முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பக் கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெருக்கும் வகையில் காஞ்சிபுரத்தில் பிரம்மாண்டமான 'செமிகண்டக்டர் பூங்கா' அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். மின்சாரத்துறை மற்றும் தொழில்துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், மொத்தம் ரூபாய் 33 ஆயிரத்து 066 கோடி நிதி ஒதுக்கீட்டில் இவை அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த பிரம்மாண்டமான திட்டங்கள் பொது மக்களிடையேயும் தொழில் அதிபர்களிடையேயும் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

vijay dress code
vijay dress codeimage credit-newindianexpress.com

சட்டமன்றத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ள இந்த அதிரடி அறிவிப்பு காரணமாக தமிழகத்தின் மின்சார உள்கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முக்கிய மைல்கல்லாக இது பார்க்கப்படுகிறது. தனியார் பங்களிப்பு இல்லாமல் எந்தத் துறையும் வளர்ச்சி அடைய முடியாது. அத்துடன் இதன் மூலம் வேலை வாய்ப்பும் அதிகரிக்கும்.

மேலும்சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

திருச்சியில் பல்முனை சரக்கு போக்குவரத்து மையம்

கோயம்புத்தூரில் டிஜிட்டல் நிதி மையம் : தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) மூலம் கோயம்புத்தூரில் டிஜிட்டல் நிதி மையம் (கோயம்புத்தூர் ஃபின்டெக் மையம்) 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

காஞ்சியில் மின்னணு உற்பத்தி பூங்கா : காஞ்சிபுரம் மாவட்டம், மதுரமங்கலத்தில், குறைக்கடத்தி மற்றும் மின்னணு உற்பத்தி பூங்கா 175 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிப்காட் நிறுவனம் மூலம் அமைக்கப்படும். இதில் உலகத்தரம் வாய்ந்த, R & D - Research and Development வசதிகள் ஏற்படுத்தப்படும்.இதன் மூலம் சுமார் 5,000 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும்.

இதையும் படியுங்கள்:
#BREAKING: தூய்மை பணியாளர்களுக்கு ஜாக்பாட்! சம்பள உயர்வு, விடுமுறை - அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!
cm vijay
logo
Kalki Online
kalkionline.com