ஊழல் புகார் வந்தால் பதவி அவுட்..! அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை!

தவெக அரசின் முதல் பட்ஜெட் (2026-27) தயாரிப்பு தீவிரம்; தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முதல்வர் அதிரடி உத்தரவு!
முதலமைச்சர் விஜய்
முதலமைச்சர் விஜய்
Updated on

முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது.தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யவிருக்கும் முதல் பட்ஜெட் இது என்பதால், இக்கூட்டம் அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

தவெக அரசு தாக்கல் செய்யவுள்ள 2026 - 27ஆம் நிதியாண்டுக்கான முதல் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தயாரிப்புப் பணிகள், புதிய திட்டங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான அனுமதிகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. அத்துடன் புதிய திட்டங்கள் தொடங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. தவெக அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் என்பதால், இதில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து அதிகாரிகளின் பரிந்துரைகளை கவனமாகக் கேட்டறிந்தார். அத்துடன் தேர்தல் காலத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை பட்ஜெட்டில் எவ்வாறு முன்னிலைப்படுத்துவது என்பது குறித்து துறை செயலாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளின் பரிந்துரைகளை முதலமைச்சர் விஜய் கவனமாகக் கேட்டறிந்தார்.இக்கூட்டத்தில், தமிழகத்தில் ஊழலற்ற மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவதில் தவெக அரசு உறுதியாக இருக்கும் என்று குறிப்பிட்ட முதலமைச்சர் விஜய், அமைச்சர்களுக்கு பல அதிரடி உத்தரவுகளையும் எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளார்.

அதாவது,மக்கள் இயக்கத்தில் பல ஆண்டுகளாக உழைத்தவர்கள் மற்றும் மாற்றுக் கட்சியிலிருந்து வந்து அமைச்சரவையில் இடம் பிடித்தவர்கள் என பலர் இருந்தாலும், நிர்வாகத்தில் யாருக்கும் எந்தவித சலுகையும் காட்டப்படாது என்று திட்டவட்டமாக கூறினார்.

"அமைச்சர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது ஏதேனும் ஊழல் புகார்கள் வந்தால் உடனடியாக பதவி பறிக்கப்படும். தவறு செய்வோர் மீது எவ்வித பாரபட்சமும் இன்றி சட்டப்படியான நடவடிக்கைகள் பாயும்."— முதலமைச்சர் விஜய்

முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு முழுமையான வெளிப்படைத் தன்மை மற்றும் லஞ்சமற்ற நிர்வாகத்தை வழங்குவதை தனது முதன்மைக் கொள்கையாகக் கொண்டுள்ளது. தனது தலைமையிலான ஆட்சி வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில் தான் இன்று அமைச்சரவை கூட்டத்தில் விஜய் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சர்களின் பொதுவெளி செயல்பாடுகள் குறித்து பேசிய முதல்வர், தேவையற்ற அரசு அலுவலக ஆய்வுகளையும், குறிப்பாக அரசுப் பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களின் கல்வி நேரத்தை வீணடிப்பதையும் தவிர்க்குமாறு உத்தரவிட்டார்.

vijay dress code
vijay dress codeimage credit-newindianexpress.com

பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களின் கல்விச் செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவிப்பதையோ, அங்கு 'ரீல்ஸ்' (Reels) எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதையோ அமைச்சர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது.தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யவிருக்கும் முதல் பட்ஜெட் இது என்பதால், இக்கூட்டம் அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

அமைச்சர்கள் மிகுந்த கவனமுடன் மக்கள் பணியாற்ற வேண்டும் என்றும், எங்கும் எதிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் மக்கள் நலனே பிரதானம் என்ற தாரக மந்திரத்துடன் செயல்பட வேண்டும் என்ற முதல்வரின் இந்த அதிரடி உத்தரவுகள், தமிழகத்தில் ஒரு தூய்மையான, நேர்மையான சகாப்தத்தை தவெக அரசு உருவாக்கும் என்ற பலத்த நம்பிக்கையைப் பொதுமக்கள் மத்தியில் ஆழமாக விதைத்துள்ளது.

இதையும் படியுங்கள்:
#BREAKING :தமிழ்நாட்டில் கலர் அப்பளம் விற்பனைக்கு தடை!
முதலமைச்சர் விஜய்
இதையும் படியுங்கள்:
சூப்பர் நியூஸ்..! தமிழகத்தில் 2,000 ஏசி பேருந்துகளை களமிறக்கும் முதல்வர்.!
முதலமைச்சர் விஜய்
logo
Kalki Online
kalkionline.com