#BREAKING: முதல்வர் விஜய் வர வேண்டாம்.. பரபரப்பை கிளப்பிய டி.கே.சிவகுமார்..!

தற்போதைய அரசியல் சூழல் காரணமாக தமிழக முதல்வர் விஜய்யை வேறு தேதியில் சந்திக்கவுள்ளதாக கர்நாடக முதல்வர் அறிவிப்பு.
காவிரி விவகாரம்
CM Vijay
Updated on

காவிரியில் தண்ணீரை திறப்பது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையே நீண்ட காலமாகவே பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், தமிழ்நாட்டுக்கு 15 நாட்களில் 3,500 கன அடி நீரை திறந்து விட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடகா மேல்முறையீடு செய்யவுள்ளது.

இந்நிலையில் இன்று கர்நாடகா துணை முதல்வர் பரமேஸ்வரா மற்றும் நீர்வளத் துறை அமைச்சருடன் உயர் மட்ட ஆலோசனையில் ஈடுபட்டார் கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமார். காவிரி விவகாரத்தில் ஆகஸ்ட் 3-ம் தேதி தமிழக முதல்வர் விஜய், கர்நாடகா முதல்வரை சந்திப்பதாக இருந்தது.

ஆனால் அன்றைய தினம் சந்திக்க வேண்டாம். தற்போதைய அரசியல் சூழலில் வேறொரு நாளில் சந்தித்துப் பேசுவோம் என கர்நாடகா முதல்வர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
நீர் வளத்தை மேம்படுத்த உதவும் நீர் பிடிப்புக் குழிகள்!
காவிரி விவகாரம்

கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமார் கூறுகையில், “காவிரி விவகாரம் தொடர்பாக இரு மாநில தலைமைச் செயலாளர்களும் விவாதித்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சரும், நானும் அவரவர் மாநில நலனில் அக்கறையுடன் உள்ளோம். நாளை (ஆகஸ்ட் 1) நடக்க உள்ள அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும்.

தற்போதைய அரசியல் சூழ்நிலை காரணமாக கர்நாடக பயணத்தை தமிழக முதல்வர் விஜய் தவிர்க்குமாறு தொலைபேசி வாயிலாக கேட்டுக் கொள்ள இருக்கிறேன். ஏற்கனவே தமிழக முதல்வர் விஜய்யை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளன. இருப்பினும் வேறொரு தேதியில் தமிழக முதல்வரை வரவேற்று பேச்சுவார்த்தை நடத்துவேன்.

கடந்த மூன்று ஆண்டுகளில் கர்நாடகாவில் நல்ல மழைப்பொழிவு இருந்தது. இதன் காரணமாக 177 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டிய இடத்தில் நாங்கள் 400 டிஎம்சி வரை தண்ணீரை திறந்து விட்டோம். ஆனால் இந்த முறை கர்நாடகாவில் மழைப் பொழிவு எதிர்பார்த்ததை விட குறைவாகவே இருக்கிறது. இதன் காரணமாகவே தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து விட முடியாது என காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தெரிவித்தோம்.

ஆனால் கர்நாடகாவில் தண்ணீர் இருப்பது போலவே 15 நாட்களில் 3500 கண அடி நீரை திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து நாங்கள் மேல்முறையீடு செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

“விவசாயத் தேவையைக் காட்டிலும் மக்களின் குடிநீர் தேவைக்கே முன்னுரிமை அளிக்கப்படும். காவிரி நதிநீர் பங்கீட்டில் சட்டப் போராட்டம் தொடரும்” என கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

காவிரி நதிநீர்
CM vijay
இதையும் படியுங்கள்:
ஒரு துளி நீர் கூட வீணாகாது..! இனி அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளிலும் ஸ்மார்ட் குடிநீர் மீட்டர்..!
காவிரி விவகாரம்

காவிரி நீரைக் கேட்டு முதல்வர் விஜய் கர்நாடகாவிற்கு வந்தால், பெங்களூர் விமான நிலையத்தை முற்றுகையிடுவோம் என சற்றுமுன் கன்னட கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே காவிரி நீர் தொடர்பாக பரபரப்பான சூழல் நிலவி வரும் சூழலில், இவரின் எச்சரிக்கை மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவிற்கு தமிழக முதல்வர் விஜய் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளிவந்த நாளிலிருந்து, எதிர்கட்சிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வர் விஜய் கர்நாடகாவிற்கு செல்லும் முடிவை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அதோடு காவிரியில் மேகதாது அணையை கர்நாடகா கட்டி விட்டால், டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் கூட, ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகா அரசிடம் போராடியும், வாதாடியும் தான் தண்ணீரை பெற வேண்டிய சூழல் உள்ளது என இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com