#BREAKING : கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியேற்றினார் முதலமைச்சர் விஜய்..!

80-வது சுதந்திர தினத்தையொட்டி, முதலமைச்சர் விஜய் கோட்டை கொத்தளத்தில் மூவர்ணக் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
cm vijay flag hoist
cm vijay flag hoistimage credit- puthiyathalaimurai tv, polimernews tv
Updated on

தமிழகத்தின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் பங்கேற்கும் முதல் சுதந்திர தின விழா இன்று சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் நடைபெற்றது. தமிழக அரசு சார்பில் நடைபெற்ற விழாவில் இன்று காலை 8.45 மணிக்கு அவர் தேசியக் கொடியை ஏற்றினார்.

நாடு முழுவதும் இன்று 80-வது சுதந்திர தினவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 'வந்தே மாதரம் தேசிய பாடலில் 150வது ஆண்டு கொண்டாட்டம்' மற்றும் '2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இளைஞர் சக்தி' என்கிற கருப்பொருளில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.

சுதந்திர நாளில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துவது வழக்கம். இன்று நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் காலை 7:30 மணியளவில் தேசியக் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். தொடர்ச்சியாக அவர் 13-வது ஆண்டாக கொடியேற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் முறையாக இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் டெல்லி செங்கோட்டையில் 'வந்தே மாதரம்' என்ற தேசிய கீதம் முறைப்படி பாடப்பட்டது.

அதேபோல் அந்தந்த மாநிலங்களின் முதலமைச்சர்கள் தேசியக்கொடியேற்றி உரையாற்றுவார்கள். அந்த வகையில், தமிழக அரசு சார்பில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடக்கும் 80-வது சுதந்திர தின விழாவில் இந்தாண்டு முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு தேசியக்கொடியை ஏற்ற உள்ளார்.

முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் பங்கேற்றும் முதல் சுதந்திர தின விழா என்பதால் கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் இந்த கொடியேற்ற நிகழ்ச்சி கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் இன்று காலை 8.20 மணிக்கு நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டார் முதலமைச்சர் விஜய்.

மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே வந்ததும் அவர் வந்ததும், காவல்துறையின் மோட்டார் சைக்கிள்கள் முன்னும் பின்னும் அணிவகுத்து அவரை கோட்டைக்கு அழைத்து வந்தனர்.

அதனைதொடர்ந்து கோட்டை கொத்தளத்தில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் விஜய் ஏற்றுக்கொண்டார்.

அதன்பிறகு மேடைக்கு வந்த முதலமைச்சர் அங்கு காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து திறந்த ஜீப்பில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.

பின்னர் சென்னை புனித ஜார்ஜ கோட்டைக்கு சென்று 8.45 மணியளவில் கொடிக்கம்பத்தில் மூவர்ணக் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

தேசியக் கொடியை ஏற்றிய பிறகு முதல்-அமைச்சர் விஜய் சுதந்திர தின உரையாற்றினார்.

சுதந்திர தினத்தை கொண்டாடும் என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.

80வது சுதந்திர தினத்தில் தேசிக்கொடியை ஏற்றிவைத்து, என்னை பேச வைத்த சொந்தங்களுக்கு நன்றி தெரிவித்தார்.

கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்வுகள்
கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்வுகள்image credit- puthiyathalaimurai tv, polimernews tv

தங்களது உயிரை, வாழ்க்கையை இழந்து சுதந்திரம் வாங்கித்தந்த தியாகிகள் அனைவருக்கும் வீர வணக்கம். ஒவ்வொருவருக்கும் எனது தனிப்பட்ட முறையில் வீர வணக்கங்களை செலுத்துகிறேன்.

மக்கள் ஒன்றுசேரும் போது ஜாதி, மதம் உள்ளிட்ட வேறுபாடுகள் உடையும். அப்படி உடைந்து நொறுங்கும் போதுதான் சுதந்திரம் கிடைக்கும். அதை கெட்டியாக பிடித்து முன்னேறுகிறோம்.

லஞ்சம், ஊழலிலிருந்து காப்பதும் சுதந்திரத்துககு சமமானது. பொதுவாழ்வில் சமரசம் இருக்கக்கூடாது. மக்கள் நலன் முக்கியம் என்ற அடிப்படையில் தவெக செயல்படுகிறது.

என்னை பொறுத்தவரை மக்கள் தான் ஆட்சியாளர்கள். போராடி பெற்ற சுதந்திரம், சிலருக்கானதாக மட்டுமில்லாமல் அனைத்து மக்களுக்குமானதாக இருக்க வேண்டும்.

2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாடு பொருளாதாரத்தை 1.5 டிரில்லியன் டாலராக உயர்த்த நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில் நிர்வாக ரீதியாக மத்திய அரசோடு ஒத்துழைப்போடு செயல்படுகிறோம்.

விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி, குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்துக்கு நிதி தரப்பட்டுள்ளது.

உங்கள் எதிர்பார்ப்பு, கருத்துகளை மனதில் வைத்து புதிய அறிவிப்புகளை அறிவிக்கிறோம்.

இதையும் படியுங்கள்:
எதிர்பார்ப்பில் தமிழகம்: கோட்டை கொத்தளத்தில் கொடியேற்ற தயாராகும் முதல்வர் விஜய்!
cm vijay flag hoist

125 நாள் வேலைவாய்ப்பு திட்டம், ஜல் ஜீவன் திட்டம், சுகாதாரத்துறையில் ஏஜ செயலி போன்றவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் படைவீரர்கள் நலன் கருதி 2 மகள்களுக்கான திருமண உதவி ரூ.25,000ல் இருந்து ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் கடும் நடவடிக்கை எடுக்க ஆட்சியர்கள், எஸ்பிக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

உரையாற்றிய பின்னர் சுதந்திர தின விழாவின் ஒரு பகுதியாக தகைசால் தமிழர் விருது, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பெயரிலான விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதல்-அமைச்சரின் நல் ஆளுமை விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை விஜய் வழங்கினார்.

இந்த விழாவில் முதலமைச்சர் விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ. சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், நடிகை திரிஷா, அமைச்சர்கள், எம்ஏல்ஏக்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்கள்:
பரத நாட்டியம்.. சுதந்திர தின பவள விழா! 
cm vijay flag hoist

சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com