

தமிழ்நாடு காங். கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு செல்கிறார் முதலமைச்சர் விஜய்
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சமீபத்தில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் வரலாற்றுப் புகழ்மிக்க வெற்றியை பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவரும், முதலமைச்சருமான மாண்புமிகு திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (12.05.2026) செவ்வாய்க்கிழமை மாலை 3.00 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவன் வருகை தருகிறார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் திரு. கிரிஷ் சோடங்கர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் திரு. சூரஜ் எம்.என். ஹெக்டே, திரு. நிவேதித் ஆல்வா, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. எஸ். ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற இந்தான் முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர்கள், சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், சர்க்கிள், வட்ட தலைவர்கள் மற்றும் அதன் நிர்வாகிகள், பெருநகர சென்னை மாமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் அதன் நிர்வாகிகள் உள்ளிட்ட அனையரும் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here