IT ஊழியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன காக்னிசன்ட்..! இனி AI பார்த்து பயப்பட தேவையில்லை..!

Progress in job
Progress in job
Published on

மனித நுண்ணறிவு தேவைப்படும் பணிகளைச் செய்யக்கூடிய இயந்திரங்களை உருவாக்குவதில் செயற்கை நுண்ணறிவு கவனம் செலுத்துகிறது.செயற்கை நுண்ணறிவு (AI) மனித நுண்ணறிவைப் பிரதிபலிக்கும் இயந்திரங்களின் திறனைக் குறிக்கிறது. இது சாட்பாட்கள், பரிந்துரை அமைப்புகள், சுய-ஓட்டுநர் கார்கள் போன்ற தொழில்நுட்பங்களை இயக்குகிறது, இதன் மூலம் கணினிகள் தரவுகளிலிருந்து கற்றுக்கொள்ளவும், முடிவுகளை எடுக்கவும், சிக்கல்களைத் தீர்க்கவும் உதவுகிறது.

செயற்கை நுண்ணறிவு (AI) கணினி அறிவியலின் ஒரு கிளையாகும், இது பொதுவாக மனித நுண்ணறிவு தேவைப்படும் பணிகளைச் செய்யக்கூடிய இயந்திரங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கற்றல், சிக்கல் தீர்க்கும் திறன், முடிவெடுத்தல் மற்றும் புரிதல் போன்ற மனித திறன்களை உருவகப்படுத்த இயந்திரங்களை AI செயல்படுத்துகிறது.

AI இன் பொதுவான பயன்பாடுகளில் பேச்சு அங்கீகாரம், பட அங்கீகாரம் , உள்ளடக்க உருவாக்கம், பரிந்துரை அமைப்புகள் , சுய-ஓட்டுநர் கார்கள் மற்றும் AI முகவர்கள் ஆகியவை அடங்கும் .

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வருகை மனிதர்களின் வேலை வாய்ப்பை மிக வேகமாக பறித்து வருகிறது. பல்வேறு நிறுவனங்களும் ஏஐ மூலம் தங்களுடைய வேலைகளை தானியங்கு முறைக்கு மாற்றிவிட்டன. இதனால் அந்த வேலையில் இருந்த மனிதர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக கூகுள், அமேசான் போன்றட பெரிய நிறுவனங்களில் தொடங்கி சிறிய சிறிய ஸ்டார்ட் அப்கள் வரை ஏஐ மூலம் தன்னுடைய வேலைகளை எளிமையாக்கி வருகின்றன.

அமேசான் நிறுவனம் தங்களுடைய கிடங்குகளில் கூட ஊழியர்களுக்கு மாற்றாக ரோபோக்களை பணி நியமனம் செய்வதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இத்தகைய சூழலில் உலகின் முன்னணி ஐடி நிறுவனமான காக்னிசன்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரவிக்குமார் ஏஐ தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புத் துறையில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

இது தற்போது கல்லூரி மாணவர்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய வகையில் அமைந்துள்ளது. உலக அளவில் மூன்றரை லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களை கொண்டது தான் காக்னிசன்ட் நிறுவனம். இதன் தலைமை செயல் அதிகாரி ரவிக்குமார், ஏஐ பல்வேறு வேலைகளை ஆட்டோமேட் செய்து விட்டது ஆனால் அது நம் வேலை வாய்ப்பை பறிக்கவில்லை என கூறுகிறார். மேலும்,புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறது எனவும் குறிப்பாக நுழைவு நிலை வேலைகளை அதிகப்படுத்த போகிறது எனவும் கூறியிருக்கிறார்.

ஒரு வேலையின் தொடக்கம் மனிதர்களிடமும் இடைப்பட்ட பகுதி ஏஐ இடமும் இருக்கும் .ஆனால், இறுதியாக அதனை சரிபார்த்து அங்கீகரிக்க வேண்டிய பொறுப்பு மனிதர்களிடம் மட்டுமே தொடர்ந்து இருக்கும் என கூறுகிறார்

தங்கள் நிறுவனம் ஸ்டெம் எனப்படும் அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய பிரிவுகளை சேர்ந்த நபர்கள் மட்டும் என இல்லாமல் கலை மற்றும் தொழில்நுட்பம் அல்லாத பிற பிரிவுகளில் பட்டப்படிப்பை முடித்த பட்டதாரிகளை அதிக அளவில் வேலைக்கு எடுக்கப் போகிறது எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். தங்கள் நிறுவனம் இதற்காக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை நாடி செல்ல இருப்பதாகவும் அவர் ஒரு நம்பிக்கை விதையை கல்லூரி மாணவர்களிடையே விதைத்துள்ளார்.

மனிதர்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டது தான் ஏஐ தொழில்நுட்பம் என தெரிவித்திருக்கும் அவர் நம்முடைய செயல்திறனை மேம்படுத்துவதற்காக தான் ஏஐ பயன்படுத்துகிறோம் என விளக்கம் அளிததிருக்கிறார். காக்னிசன்ட் நிறுவன ஊழியர்கள் ஏஐ தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்தி கொள்ள பயிற்சிகளை தருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது பல்வேறு தொழில்நுட்ப வேலைகளை ஏஐ பார்த்துக்கொள்கிறது என்பதால் தங்கள் நிறுவனங்களில் தொழில்நுட்ப பிரிவுகளில் அல்லாத மாணவர்களை வேலைக்கு அமர்த்த முன்வந்திருக்கிறோம் என கூறியிருக்கிறார். காக்னிசன்ட் செயல் அலுவலரின் இந்த அறிவிப்பு செயறகை நுண்ணறிவு தம்முடைய வேலை வாய்ப்புகளை பறித்து விடுமோ என்னும் அச்சத்தில் இருக்கும் இன்றைய படித்த இளைஞர்களை அச்சத்தை போக்குவதாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
பித்ரு தோஷத்தைப் போக்கும் சக்தி வாய்ந்த பரிகாரத் தலங்கள்!
Progress in job

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com