ஆவின் கார்டுதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி..! லிட்டருக்கு 2 தள்ளுபடி திடீர் ரத்து..!

ஆவின் பால் அட்டை தள்ளுபடி ரத்து
ஆவின் பால் அட்டை தள்ளுபடி ரத்து
Updated on

தமிழக அரசு சார்பில் பால்வளத்துறைக்கு என்று தனி அமைச்சகம் உள்ளது.பால்வளத்துறையின் கட்டுப்பாட்டில் ஆவின் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் அதிக கொழுப்பு, நடுத்தர கொழுப்பு, குறைந்த கொழுப்பு என்ற 3 வகைகளில் மக்களுக்கு தேவையான பால் பாக்கெட்டுகள் பல்வேறு வண்ணங்களில் வழங்கப்பட்டு வருகின்றன.

மாதாந்திர பால் அட்டை நுகர்வோருக்கு ஆவின் வட்டார அலுவலகம் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக தங்கு தடையின்றி பால் வழங்கப்படுகிறது. மேலும், நுகர்வோர் தங்கள் வீட்டில் இருந்தபடியே ஆவின் புதிய மாதாந்திர பால் அட்டை வாங்குவதற்கும், புதுப்பித்துக்கொள்ளவும் இணையதளத்தில் (www.aavinmilk.com) வசதி செய்யப்பட்டுள்ளது. பால் அட்டைக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இருப்பிடச் சான்றிதழ் அல்லது அடையாள அட்டை நகலைச் சமர்ப்பித்து பால் அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம்.

இந்நிலையில் ஆவின் நிர்வாகம் அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இந்த புதிய விதிமுறை ஜூலை 1 முதல் அமலுக்கு வர உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதாவது கோவையில் ஆவின் பால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்ட்டுள்ளதாக மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மேலும், முகவர்களுக்கு இனி பால் பாக்கெட் அடிப்படையில் அல்லாமல் பெட்டி அடிப்படையில் கணக்கிட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் ஆவின் பால் அதிகபட்ச சில்லறை விலையிலேயே விற்பனை செய்ய வேண்டும் என நிர்வாகம் முகவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Aavin
Aavin

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆவின் மாதாந்திர பால் அட்டை வைத்துள்ள நுகர்வோருக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த சிறப்புச் சலுகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கார்டு வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த லிட்டருக்கு 2 ரூபாய் தள்ளுபடி இனி கிடையாது. இந்த சலுகை ரத்து செய்யப்படுவதால், நுகர்வோர்கள் இனி வழக்கமான விலையிலேயே பால் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

பால் முகவர்களுக்கு சில முக்கிய முடிவுகளை ஆவின் நிர்வாகம் எடுத்துள்ளது. வரும் 1-ஆம் தேதி முதல் பால் முகவர்கள் தங்களுக்கான மாதாந்திர கமிஷன் தொகையை முன்கூட்டியே கழித்துக் கொண்டு, மீதமுள்ள தொகையை மட்டும் நிர்வாகத்திடம் செலுத்தும் புதிய கட்டண முறை அமல்படுத்தப்பட உள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில்,

கோவை மாவட்டத்தில் வரும் 1ஆம் தேதி முதல் ஆவின் பால் முகவர்களுக்கு தங்கு தடையின்றி பால் கிடைப்பதை உறுதி செய்ய சீர்திருத்த நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுகிறது. கோவை மாவட்டத்தில் ஆவின் பால் அட்டை வைத்திருக்கும் நுகர்வோர்கள் 11ஆம் தேதி முதல் 25ஆம் தேதிக்குள் தொகையினை கைப்பேசி செயலி மூலம் செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும். தற்போது மாதாந்திர பால் அட்டை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு லிட்டர் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் தள்ளுபடி வழங்கப்பட்டு வருவது நிறுத்தம் செய்யப்படுகின்றது.மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கு 1.7.26 முதல் அதிகபட்ச சில்லறை விலையிலேயே ஆவின் பால் விற்பனை செய்யப்படும். பால் முகவர்களுக்கு பால் தேவை பட்டியல் பாக்கெட் அடிப்படையில் கணக்கிட்டு பதிலாக இனி பெட்டி அடிப்படையில் தேவைப்பட்டியல் வழங்கப்படும்.

வரும் ஒன்றாம் தேதி முதல் முகவர்கள் தங்கள் கமிஷன் தொகையை கழித்துக் கொண்டு பணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும். ஒன்றாம் தேதி முதல் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய விற்பனை பிரிவு மென்பொருள் செயலி மூலமாக தேவை பட்டியலை உறுதி செய்ய வேண்டும் என ஆவின் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மாதாந்திர அட்டைதாரர்களுக்கு இனி MRP விலையிலேயே பால் விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவின் பால் விநியோகத்தை முறைப்படுத்தவும், முகவர்களின் பணப்பரிவர்த்தனைகளை எளிதாக்கவும் இந்த புதிய அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆவின் நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
கடைசி நிமிடம் வரை சீட் நுனியில் உட்கார வைக்கும் படங்கள்... OTT-ல் மிஸ் பண்ணிடாதீங்க!
ஆவின் பால் அட்டை தள்ளுபடி ரத்து
logo
Kalki Online
kalkionline.com