#BREAKING : கோவை மாநகராட்சியில் பயங்கர அடிதடி! புடவையை பிடித்து இழுத்து தள்ளுமுள்ளு..!

செம்மொழிப் பூங்கா ஊழல் புகாரால் வெடித்த மோதல்; கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் உட்பட 5 பேர் 2 மாதங்களுக்கு இடைநீக்கம்!
கோவை மாநகராட்சி
கோவை மாநகராட்சிsource:Dinamalar
Updated on

கோவை மாநகராட்சி கூட்டத்தில் பெண் கவுன்சிலர்களுக்கு இடையே அடிதடி சண்டை ஏற்பட்ட நிலையில் காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ரகளையில் ஈடுபட்டு மாமன்றக் கூட்டத்தின் மாண்பை கெடுத்து விட்டதாகக் கூறி சஸ்பெண்ட் செய்து மேயர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கோவை மாநகராட்சி கூட்டம் இன்று (ஜூலை 17) கூடியது. கூட்டம் துவங்கியவுடன், செம்மொழி பூங்கா ஊழல் பற்றி பேச காங்., கவுன்சிலர் காயத்ரி முயற்சி செய்தார். மேயர் ரங்கநாயகியை முற்றுகையிடவும் முயற்சித்தார். அவருக்கு மேயரும், திமுக கவுன்சிலர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் தி.மு.க.,- காங்கிரஸ் கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. 

ரூபாய் 40 கோடி ஊழல் நடந்திருப்பதாக வெளிவந்த பத்திரிகை செய்தி தொடர்பாக மாநகராட்சி ஆணையரிடம் முறையிட்ட போது காங்கிரஸ் கட்சியின் பெண் கவுன்சிலரை மூன்றுக்கும் மேற்பட்ட திமுக பெண் கவுன்சிலர்கள் புடவை மற்றும் கையைப் பிடித்து இழுத்து தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். அத்துடன் காங்கிரஸ் பெண் கவுன்சிலரை திமுக கவுன்சிலர்கள் கீழே தள்ளி விட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால் மாநகராட்சி அலுவலகமே பரபரப்பாக காணப்பட்டது.

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் ரங்கநாயகி தலைமையில் தொடங்கிய பொழுது செம்மொழி பூங்கா அமைப்பதில் ஏற்பட்ட முறைகேடு மற்றும் ஊழல் நடந்ததாக கூறி காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி பேச முயற்சி செய்துள்ளார். மேயர் ரங்கநாயகியை முற்றுகை இடவும் முயற்சித்தார்.

அவருக்கு மேயரும், திமுக கவுன்சிலர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் மற்றும் மு. க. ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்களை கூட்டரங்கில் வைப்பது தொடர்பாகவும் திமுக - காங்கிரஸ் கவுன்சிலர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காங்கிரஸ் கவுன்சிலரை ஊழல் குறித்து மேற்கொண்டு பேச விடாமல் தடுத்தனர்.

அப்போது ஆளுங்கட்சியான திமுக கவுன்சிலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் திமுக-காங்கிரஸ் கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி திமுக மற்றும் காங்கிரஸ் பெண் கவுன்சிலர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு மற்றும் கைகலப்பு ஏற்பட்டது. பெண் கவுன்சிலர்கள் ஒருவருக்கொருவர் ஆவேசமாக மோதிக் கொண்டதால் அந்த இடமே போர்க்களம் போல காட்சி அளித்தது. இதனால் கூட்டத்தில் கூச்சல் மற்றும் குழப்பம் நிலவியது.

coimbatore corporation
coimbatore corporationsource:dinamalar

மாமன்ற கூட்டத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதாகக் கூறி, கூட்டத்தில் ஒழுங்கீனமாக செயல்பட்டதால் காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் ராமமூர்த்தி, பூபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் பிரபா ரவீந்திரன், சாந்தி ஆகிய ஐந்து பேரை இரண்டு மாதங்களுக்கு சஸ்பெண்ட் (இடைநீக்கம்) செய்வதாக மேயர் அறிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சி கூட்டத்தில் கூச்சல், குழப்பம் ஏற்படுவதும், மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் பெண் கவுன்சிலர்கள் ஒருவருக்கொருவர் மல்லுக்கட்டி சண்டையிடுவதும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இக்காட்சிகளை காணும்போது, உள்ளாட்சி நிர்வாகத்தில் ஒழுங்கும், அரசியல் மரியாதையும் குறைந்துவிட்டதோ என்று மக்கள் எண்ணத் தோன்றுகிறது. நாகரிகமற்ற இத்தகைய அரசியல் கேலிக்குரியது; பண்பாடற்ற இச்செயல் நாட்டுக்கே அவமானத்தை தேடித்தரும் என்பதில் ஐயமில்லை.

பொறுப்பான பதவியில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகளும் கட்சித் தலைவர்களும் சண்டையிட்டுக் கொள்வது அவலத்தின் உச்சமாகும். அரசியல் நாகரிகம் கருதி இனியாவது இத்தகையப் பொறுப்பாளர்கள் பண்புடன் நடந்து கொள்வார்களா என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
பழைய ஒன்லைன், புதிய பாணி: 'அன்பே டயானா' படம் சொல்லும் பாடம் என்ன?
கோவை மாநகராட்சி
இதையும் படியுங்கள்:
மாநில அளவில் முதலிடம்! நீட் மறுதேர்வில் 720க்கு 705 பெற்று சாதனை புரிந்த வெங்கடபதி வேலாயுதம்!
கோவை மாநகராட்சி
logo
Kalki Online
kalkionline.com